SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆவடி அருகே தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவன் கொலை: மனைவி கைது

2022-06-28@ 01:01:17

ஆவடி: ஆவடி அருகே நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தனது மனைவியை கணவர் சரமாரி அடித்து உதைத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மனைவி, அவரது தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை, தும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (37). இவரது மனைவி விஜயலட்சுமி (27). இவர்கள் இருவரும் அதே பகுதியில் ஒரு தனியார் செங்கல் சூளையில் 12 வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களின் சொந்த ஊர் விழுப்புரம் அருகே கெடார் கிராமம். இத்தம்பதியின் 2 மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் பாட்டி வீட்டில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களாக கிருஷ்ணன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் குழந்தைகளின் படிப்பு மற்றும் குடும்ப செலவுக்கு மனைவியிடம் பணம் தராமல் கிருஷ்ணன் குடிபோதையில் வாய்த்தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை குடிபோதையில் வீடு திரும்பிய கிருஷ்ணன், வாய்க்கு ருசியாக உணவு சமைக்கவில்லையா எனக் கேட்டு மனைவி விஜயலட்சுமியிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாய்த்தகராறு முற்றியதில் மனைவியை கிருஷ்ணன் சரமாரி தாக்கிவிட்டு, அங்கேயே படுத்து தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான விஜயலட்சுமி, தனது கணவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டுவிட்டார். இதனால் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு செங்கல் சூளை நிர்வாகி ஜெயபால் தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு கிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவி விஜயலட்சுமியை கைது செய்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakistan-hospital

  பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

 • temple-dubai-6

  துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில்!: சிவன், விஷ்ணு சன்னதியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு திறப்பு.. கண்கவர் புகைப்படங்கள்..!!

 • gandhi-birthday

  காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

 • tirupati-4th-day-30

  திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

 • ian-florida

  புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்