சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்
2022-06-26@ 00:07:50

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு செல்போன் மூலம் இதுவரை 100 பேர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக சென்னை காவல் ஆணையரிடம் அவரது ஆதரவாளர் புகார் தொடுத்துள்ளார்.இதுகுறித்து அவரது வழக்கறிஞர் பாலமுருகன், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ராஜ்ய சபா உறுப்பினர் சி.வி.சண்முகம், முன்னாள் சட்டத்துறை அமைச்சராகவும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினராக உள்ளார். சி.வி.சண்முகத்தின் அரசியல் செயல்பாட்டால் எரிச்சலடைந்தவர்கள், தொடர்ந்து, அவருக்கு தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும், கொலை மிரட்டல்கள் செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல்கள் ரவுடிகள் மற்றும் குண்டர்களிடம் இருந்து வந்துள்ளன. அதுதொடர்பாக ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரோசனை காவல் நிலையத்தில், புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கிடையில் நேற்று முன்தினம் மதியம் 1.46 மணிக்கு வாட்ஸ்அப் மூலம், சி.வி.சண்முகத்துக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து மிரட்டல் வந்தது. அதில் தகாத வார்த்தைகளும் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டு இருந்தது. உடனே, நான் காவல் கட்டுப்பட்டு அறை எண் 100க்கு தொடர்புகொண்டு தகவல் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் ஏற்கனவே கொடுத்த புகாரின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை, சி.வி. சண்முகத்திற்கு எந்தவித போலீஸ் பாதுகாப்பும் வழங்காமல் அலட்சியப்போக்கை காவல் துறை கடைபிடித்து வருவது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். எனவே சி.வி.சண்முகத்திற்கு தகாத வார்த்தைகளினால் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுத்து தக்க பாதுகாப்பு வழங்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மதுரவாயல் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு
திருவேற்காடு சாலையில் தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை
மூவரசன்பட்டு ஊராட்சியில் ரூ.67.17 லட்சத்தில் வளர்ச்சி பணி: கிராமசபை கூட்டத்தில் முடிவு
போலீஸ் சிறப்பு தணிக்கையில் 7,195 வாகனங்கள் சோதனை: போதையில் ஓட்டியதாக 84 பேர் சிக்கினர்
இறைச்சிக்காக விஷம் வைத்து கொல்லப்பட்ட நீர் பறவைகள்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
அருமந்தை கூட்டுச்சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!