ஒருங்கிணைப்பாளரை நீக்குவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது: சண்முகம் புரியாமல் பேசுவதாக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் குற்றச்சாட்டு
2022-06-25@ 17:38:38

சென்னை: ஒருங்கிணைப்பாளரை நீக்குவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது என்றும், சண்முகம் புரியாமல் பேசுகிறார் என்றும் முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் எம்எல்ஏவும், ஓபிஎஸ் ஆதரவாளருமான கோவை செல்வராஜ் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டது, பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாத காரணத்தால் அது காலாவதியாகிவிட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். 23 தீர்மானத்தில் 3வது தீர்மானமாக தலைமை கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றிய போது, அந்த தீர்மானத்தில் 21.01.2022 செயற்குழு கூட்டத்தில் எடுத்த முடிவின் படி 3 சட்டதிருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.
அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்ய வேண்டும் என்பதும், 43வது கட்சி விதியின் படி எம்ஜிஆர், எந்த விதியையும் மாற்றலாம், ஆனால் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கிற பொதுச் செயலாளர் பதவியை தேர்வு செய்யும் அந்த விதியை எப்போதும் மாற்றக் கூடாது என்ற கூறியுள்ளார்.
இந்த காரணத்தால் 43வது விதியில் தலைவர் கூறியபடி அந்த விதிப்படி பொதுச் ெசயலாளர் என்ற பதவிக்கு பதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிக்கும் ஒரே வேட்பு மனுவாக, ஒரே வாக்காக கட்சியின் உறுப்பினர்கள் அளிக்க வேண்டும் என்று சொல்லி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, முறையாக இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கொடுத்திருக்கிற அந்த சட்டம் (20)திருத்த விதியில் கூறியிருப்பது ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் முழு அதிகாரம் கொண்டவர்கள். எந்த விதியையும் எப்போதும் அவசர காலத்தில் மாற்றும் உரிமை இவர்களுக்கு உண்டு என்று கூறி அவர்களுக்காக விதிகள் மாற்றி அமைத்து செயற்குழுவில் அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.
ஆனால் பொதுக்குழுவில் கொண்டு வரும் போது, ஏப்ரல் மாதம் 27ம்தேதியில் அனைத்து நிர்வாகிகளும், 28ம்தேதி மகளிர் செயற்குழு உறுப்பினர்களும், ஒவ்வொரு ஒன்றிய, நகர, மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்ய தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் பெட்டி வைத்து தேர்தல் நடத்தவில்லை. அதில் ேதர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அத்தனை பேருக்கும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், இரண்டு பேரும் சேர்ந்து கையெழுத்திட்டு 29ம்தேதி தேர்தல் ஆணையத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் அனுப்பப்பட்டது.
அப்படி இருக்கும் போது, சி.வி.சண்முகம் சொல்கிறார், பொதுக்குழுவில் அங்கீகாரம் கொடுக்காததால் அவர்கள் பதவி காலாவதியாகிவிட்டது என்று கூறுகிறார். அப்படி என்றால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் இந்த பொதுக்குழு அங்கீகாரம் ெகாடுக்காத காரணத்தால் அத்தனை பேரின் பதவிகளும் காலாவதியாகிவிட்டது என்று தான் அர்த்தம். இதை புரியாமல் பேசுகிறார்.
43வது விதியை பற்றி அவரே சொல்லுகிறார். 3 திருத்தங்களையும் சொல்கிறார். அது தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரையும் நீக்குவதற்கு யாருக்கும் எந்த அதிகாரம் கிடையாது. அவர் சொன்னது ஒரு கூத்து. இப்போது அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை தேர்வு செய்திருக்கிறார்களே, அப்படி என்றால் இருவரது பதவிகளும் காலாவதியாகிவிட்டால் இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்மகன் உசேன் பெயரை எப்படி முன்மொழிய முடியும். அதனால் அவரை தேர்வு செய்ததும் செல்லாது.
மேலும் 11ம்தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என்று சொல்லுகிறார். அதை அறிவிக்க அவருக்கு தகுதியும் கிடையாது. அதிகாரமும் கிடையாது. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து கையெழுத்திட்டு புதிய தேதியை அறிவித்தால் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். அதிமுகவில் குழப்பம் விளைவிக்கவே இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். கட்சியை வழி நடத்தியவர்கள் எல்லாரையும் புறக்ணித்துவிட்டு கட்சியை அழிவு பாதைக்கு அழைத்து செல்கின்றனர்.
தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ்சுடன் தான் இருக்கிறார்கள். கட்சியை காப்பாற்றிய அனைவரையும் இவர்கள் ஓரங்கட்டி விட்டார்கள். ஆட்சியை காப்பாற்றுவதற்கு மட்டும் ஓபிஎஸ் வேண்டும். முதல்வராக வருவதற்கு சசிகலா தேர்ந்தெடுத்த போது, அவரது காலில் விழுந்து ஊர்ந்து செல்வதை எல்லோரும் பார்த்தோம். அதற்கு சசிகலா வேண்டும்.
எல்லோரையும் அழித்துவிட்டு, முதுகில் குத்திவிட்டு கட்சியை கையில் எடுத்துக் கொண்டு கம்பெனி போன்று நடத்துவதற்கு தயாராகிவிட்டார்கள். அது ஒரு நாளும் நடக்காது. ஆயிரம் சண்முகம் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்துவிட முடியாது. ஓபிஎஸ்சை மேடையில் அவமானப்படுத்தினர். வெளிப்படையாக இவ்வளவு அராஜகமாக செயல்பட கூடியவர்கள் பொது வாழ்க்கையில் எப்படி இருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மக்களும், கட்சியின் தொண்டர்கள் ஓபிஎஸ் பின்னால் இருக்கின்றனர்.
நிச்சயம் நாங்கள் இந்த கட்சியை வழிநடத்துவோம். 11ம் தேதி பொதுக்குழு என்பது அது கனவாகத் தான் இருக்கும். நனவாகாது. இந்த கட்சியை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. ஓபிஎஸ் விஸ்வரூபம் எடுத்து விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வார். அதிமுகவை கட்டி காப்பார். ஓபிஎஸ் இருக்கும் வரை இவர்களது ஜம்பம் பலிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
பொதுக்குழு என்பது கனவுதான் ஒருங்கிணைப்பாளர் அதிகாரம் கிடையாது முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் குற்றச்சாட்டுமேலும் செய்திகள்
கலைஞரின் நூற்றாண்டு விழாவை, இந்தியாவையே திரும்பிப் பார்க்க கொண்டாடுவோம்! : தீர்மானம் நிறைவேற்றம்!
ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்க : தமிழக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்!!
ரெட் நோட்டீஸ் பட்டியலில் சோக்சி நீக்கம் நண்பனை ஒன்றிய அரசு காப்பாற்றி விட்டது: காங்கிரஸ் கடும் தாக்கு
சொல்லிட்டாங்க...
தமிழக வேளாண் பட்ஜெட்டில் பெரிய திட்டம் இல்லை: எடப்பாடி பேட்டி
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஈரோட்டில் 28ம் தேதி பேரணி: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!