பயணிகள் சிரமத்தை தவிர்க்க பேருந்துகளை நடுரோட்டில் நிறுத்தக்கூடாது: ஓட்டுநர்களுக்கு எம்டிசி உத்தரவு
2022-06-25@ 00:59:10

சென்னை: உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று ஓட்டுநர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கிளை மேலாளர் உள்ளிட்டோருக்கு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை: மாநகர போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், பேருந்துகளை சாலையின் இடதுபுற ஓரமாக உரிய பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சாலையின் நடுவிலோ அல்லது பேருந்து நிறுத்தத்தை விட்டு சிறிது தூரம் தள்ளியோ பேருந்தை நிறுத்துவதால், பயணிகள் சிரமத்துடன் ஓடிச் சென்று பேருந்தினுள் ஏறும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
இதனால் பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும் சில நேரங்களில் மரண விபத்தும் ஏற்பட ஏதுவாகிறது. எனவே, அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் தமது பேருந்தை சாலையின் இடதுபுற ஓரமாக உரிய பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கிவிடுமாறும் பேருந்தை சாலையின் நடுவில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கண்டிப்பாக நிறுத்தக் கூடாது. இந்த உத்தரவு பின்பற்றப்படுவது குறித்து கிளை மேலாளர் உள்ளிட்டோர் கண்காணிக்க வேண்டும். மேலும் பயணச்சீட்டு பரிசோதகர்களை முழுமையாக ஈடுபடுத்தி மாநகர போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு வருவாய் முழுமையாக எய்துவதற்கு உதவி மேலாளர் (வருவாய் - வடக்கு, தெற்கு) உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி துறையில் 1,083 காலியிடங்கள்: தேர்வுக்கு மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்
அமெரிக்காவில் உயிரிழப்பு, பார்வை பறிபோன விவகாரம் சென்னை கண் சொட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ஒன்றிய அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!