இலங்கைக்கு அழுத்தம் கொடுத்த மோடி அதானியிடம் விசாரணை நடத்த போவது எப்போது?: அமலாக்கத் துறைக்கு காங். கேள்வி
2022-06-24@ 00:06:38

புதுடெல்லி: இலங்கையில் உள்ள மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்திக்கான டெண்டர் இந்தியாவை சேர்ந்த அதானி குழும் எடுத்துள்ளது. அந்த பகுதியில் ஆய்வு நடத்தி உள்ள அதானி குழும், விரைவில் உற்பத்தி பணியை தொடங்க உள்ளது. இந்நிலையில், அதானி குழுமத்திற்கு இந்த காற்றாலை மின்சாரத் திட்டத்தை வழங்குவதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச மூலம் பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக இலங்கை மின்வாரிய தலைவர் பெர்டினாண்டோ சமீபத்தில் தெரிவித்தார். ஆனால், அடுத்த நாளே இதை மறுத்த அவர், பதவியை ராஜினாமா செய்தார்.இது தொடர்பாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப், டெல்லியில் நேற்று அளித்த பேட்டி வருமாறு: கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறை ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தி வருகிறது.
இது, அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அரசியல் ஸ்டண்ட். அனைத்து ஒன்றிய விசாரணை அமைப்புகளும் அரசாங்கத்தின் கைகளில் சிப்பாய்களாக மாறிவிட்டது. இந்த ஏஜென்சிகள் அனைத்தும் கண்ணை மூடிக்கொண்டு வரிசையில் நிற்கின்றன. மோடி அரசின் உத்தரவை பெற்றே, அமலாக்கத் துறை இயக்குநரகம் செயல்பட்டு வருகிறது. அதானி குழுமத்திற்கு காற்றாலை மின்சாரத் திட்டம் தர மோடி அழுத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் இதில் தலையிட வேண்டிய கட்டாயம் என்ன? இது பற்றி அமலாக்கத் துறையும், பிற ஏஜென்சிகளும் ஏன் விசாரிக்காமல் தூங்குகின்றன?. இது, விசாரணைக்குரிய ஊழல் வழக்கு அல்லவா? எந்த அதிகாரிகள் அல்லது அமைச்சர்களை விசாரணைக்கு அழைக்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது? அமலாக்கத்துறை எப்போதாவது அதானி குழுமத்தைச் சேர்ந்த யாரையாவது அழைத்திருக்கிறதா? அல்லது விசாரிக்க அழைக்க திட்டமிட்டுள்ளதா?’ இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை நிறுத்தம்?.. முடிவெடுக்காமல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைந்ததால் பல்வேறு மாநிலங்கள் அதிர்ச்சி..!
ஆட்டோ மீது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து ஆட்டோ முழுவதும் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றியதில் 8 பேர் உடல் கருகி பலி
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா ... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!! ..
'ஆதார் - பான்' எண்ணை இணைக்காவிடில் நாளை முதல் இரு மடங்கு அபராதம் : வருமான வரித்துறை எச்சரிக்கை!!
மகாராஷ்டிராவில் மலரும் தாமரை.. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக நாளை பதவியேற்பு!!
அதிமுக பொதுக்குழு விவகாரம் ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!