சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் வங்கதேச நிறுவனத்துடன் அப்போலோ குழுமம் ஒப்பந்தம்
2022-06-21@ 00:35:36

சென்னை: வங்கதேசத்தில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் இம்பீரியல் மருத்துவ குழுமம் மற்றும் அப்போலோ மருத்துவமனை குழுமம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.சர்வதேச தரத்தில் உடல்நல பராமரிப்பு சேவைகளை அனைத்து நபர்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டுமென்ற செயல்திட்டத்தின் அடிப்படையில், வங்கதேசத்தை சேர்ந்த இம்பீரியல் மருத்துவ குழுமம் மற்றும் அப்போலோ மருத்துவ குழுமத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இது குறித்து அப்போலோ குழும நிறுவனர் பிரதாப் சி.ரெட்டி கூறியதாவது: உலகெங்கிலும் உடல்நலத் துறையில் நேர்மறை மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும் மற்றும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மருத்துவ சேவை சென்றடைய வேண்டுமென்று எங்களது தொலைநோக்கு குறிக்கோளின் அடிப்படையில் வங்கதேசத்தில் உள்ள இம்பீரியல் மருத்துவ குழுமத்துடன் இந்த ஒப்பந்தம் செய்துள்ளோம். சிட்டகாங்கில் அமைந்துள்ள அவர்களது மருத்துவமனைக்கு, எங்களது நிபுணத்துவத்தையும், அனுபவத்தையும் வழங்குவதே இதன் நோக்கம்.
வங்கதேச நாட்டில் இம்மருத்துவமனையின் செயல்பாட்டை இன்னும் வலுப்படுத்தவும் மற்றும் உறுதியான நம்பிக்கையை கட்டமைப்பதன் மூலம் நோயாளிகளுக்கு ஒரு வலுவான மருத்துவக் குழுவை உருவாக்கவும் நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். நோயாளிகளின் நலனை உறுதி செய்வதும் மற்றும் அவர்களுக்கு ஒரு ஆசாத்தியமான சூழலமைப்பை உருவாக்குவதும் அப்போலோ - இம்பீரியல் குழுமத்தின் முதல் பொறுப்பாக இருக்கும்.இம்பீரியல் மருத்துவமனை குழும தலைவர் ரபியுல் ஹுசேன் கூறியதாவது: சுகாதார பராமரிப்பில் உலகளவில் முதன்மை வகிக்கின்ற மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சைக்கான ஒரு தனித்துவமான பெருநிறுவனமாகவும் திகழும் அப்போலோ மருத்துவமனையுடன் கூட்டாக இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
மேலும் செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
கடை வாடகை உயர்வை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் கட்டிடம் கட்ட தடையின்மை சான்று: பேரவையில் மதுரவாயல் எம்எல்ஏ கணபதி வலியுறுத்தல்
ராகுல்காந்தியின் எம்.பி பதவியை பறித்ததற்கு எதிர்ப்பு கமலாலயத்தை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி