பாதுகாப்புத் துறையில் 'அக்னி பத்' என்ற புதிய திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
2022-06-14@ 14:10:39

டெல்லி: பாதுகாப்புத் துறையில் 'அக்னி பத்' என்ற புதிய திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 'அக்னி பத்' என்ற திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்கள் 'அக்னி வீர்' என்ற ஆயுதப் படைகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் இளைஞர்களுக்கு ராணுவ சேவை வாய்ப்பை வழங்கவும் 'அக்னி பத்' திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 17 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களை ஆண்டுக்கு 45 ஆயிரம் பேர் என ராணுவத்தில் சேர்ப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
குறிப்பாக இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கிராமப்புறங்களில் இருக்கும் இளைஞர்களின் கனவை எளிமையாக்கும் வகையில் தான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த பேட்சில் இருக்கக்கூடிய 25% நபர்கள் ராணுவம் உள்ளிட்ட ஆயுத பாதுகாப்பு பணிகளில் நேரடியாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கான stipend உள்ளிட்டவை வழங்குவதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சேவா நிதி என்று அதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றுடெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
காங்கிரசில் இருந்து பெண் எம்பி சஸ்பெண்ட்
ஜம்முவில் 37 இடங்களில் சிபிஐ சோதனை
பிப்ரவரி 24 முதல் 26 வரை சட்டீஸ்கரில் காங். மாநாடு
ரூ.16,133 கோடி வட்டிக்கு ஈடாக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை பெற ஒன்றிய அரசு ஒப்புதல்
மும்பையில் தாக்குதல் நடத்தப்போவதாக தலிபான் பெயரில் மிரட்டல்: போலீஸ், என்.ஐ.ஏ.அதிகாரிகள் தீவிர விசாரணை
எத்தனை முறை உருமாறி கொரோனா வந்தாலும் கோவாக்சின் பூஸ்டர் டோஸ் மிகவும் பாதுகாப்பானது: ஒன்றிய அரசு தகவல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!