SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Dinakaran Daily news

நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க எப்போதும் தயார்: விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழாவில் கமல்ஹாசன் உறுதி..!!

2022-06-09@ 17:16:35

சென்னை: சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதற்கு எப்போதும் தயார் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்போது பேசிய கமல்ஹாசன், விக்ரம் படத்தின் வெற்றிக்கு காரணமான நண்பர்கள், தோழர்களை கடந்த ஒரு வாரமாக நேரில் சந்தித்து நன்றி கூறி வருவதாக தெரிவித்தார்.

சந்தோஷத்தை கடந்த இந்த வெற்றி பயத்தை கொடுத்திருப்பதாகவும், இன்னும் வெற்றிக்காக உழைப்போம் என்றும் கமல்ஹாசன் கூறினார். நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதற்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும், ரஜினியும், லோகேஷ் கனகராஜும் முடிவு செய்தால் இணைந்து நடிப்பதற்கு தயார் என்றார் அவர். விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகம் நடிகர் சூர்யா கால்ஹீட் கொடுத்ததும் தொடங்கும் என கமல்ஹாசன் தெரிவித்தார். நடிகர் விஜயை வைத்து படம் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்

Dinakaran Daily news
Like Us on Facebook Dinkaran Daily News
  • brazil-rain-landslide-2

    தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்