மெகா கொள்ளை
2022-06-08@ 00:03:47

கோடை விடுமுறை தொடங்கியதில் இருந்து இன்றுவரை தென்மாவட்ட ரயில்கள் நிரம்பி வழிகின்றன. காத்திருப்போர் பட்டியல் அத்தனை ரயில்களிலும் 100க்கும் மேல் உள்ளன. வழக்கமாக கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தெற்கு ரயில்வே அதை முழுமையாக மறந்து விட்டது. ஆனால் நவீன முறையில் பயணிகளிடம் இருந்து மெகா கொள்ளையை மட்டும் ரயில்வே நடத்தி வருகிறது. வழக்கமாக படுக்கை வசதி, மூன்றடுக்கு ஏசி, இரண்டடுக்கு ஏசி பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு ஏசி பெட்டிகள் இடம்பெறும். பெட்டிகள் எண்ணிக்கையை பொறுத்து பொது டிக்கெட்டுகள் வழங்கப்படும். இதேபோல் தட்கல் டிக்கெட்கள் பயணத்திற்கு முந்தைய நாள் வழங்கப்படும்.
இப்போது இந்த வரிசையில் பிரீமியம் தட்கல் என்ற ஒரு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. படுக்கை வசதிக்கு சென்னை முதல் நாகர்கோவில் வரை ரூ.425 கட்டணம். தட்கலுக்கு ரூ.500 கட்டணம். அதே போல் தட்கலுக்கு கன்னியாகுமரி ரயிலில் 125 டிக்கெட்டுகள் படுக்கை வசதிக்கு வழங்கப்படும். ஏசி பெட்டிகளுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட எண்ணிக்கை வழங்கப்படும். இப்போது பிரீமியம் தட்கல் என்ற புதிய வசதிக்கும் தட்கலுக்கும் எத்தனை எண்ணிக்கை டிக்கெட் வழங்கப்படுகிறதோ அதே டிக்கெட்கள் படுக்கை, ஏசி பெட்டிகளுக்கும் வழங்கப்படுகிறது. தட்கல் டிக்கெட் 125 விற்றாலும் அதே ரூ.500 கட்டணம்தான். ஆனால் பிரீமியம் தட்கலுக்கு ஒவ்வொரு டிக்கெட்டும் விற்பனை ஆக ஆக கட்டணம் அதிகரிக்கும்.
அப்படித்தான் இங்கு மெகா கொள்ளையை இந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ரயில்வே அரங்கேற்றி இருக்கிறது. கன்னியாகுமரி ரயிலில் இன்று நாகர்கோவில் வரை செல்ல பிரீமியம் தட்கலில் படுக்கை வசதி அதிகபட்ச கட்டணம் ரூ.1260க்கு விற்பனை ஆகி இருக்கிறது. மூன்றடுக்கு ஏசி வசதி ரூ.3820 (சாதாரண கட்டணம் 1110), இரண்டடுக்கு ஏசி ரூ.5806 (ரூ.1565),அனந்தபுரியில் ரூ.1230 (சாதாரண கட்டணம் ரூ.395), இரண்டுக்கு ஏசியில் ரூ.5755 (ரூ.1515), நெல்லையில் படுக்கை வசதிக்கு ரூ.1170 (ரூ.395), மூன்றடுக்கு ஏசி ரூ.3875 (ரூ.1040), இரண்டடுக்கு ஏசி ரூ.4720 (ரூ.1460), திருச்செந்தூர் படுக்கை வசதி ரூ.1280 (ரூ.410), மூன்றடுக்கு ஏசி ரூ.4195 (ரூ.1110), இரண்டடுக்கு ஏசி ரூ.4835 (ரூ.1585), தூத்துக்குடி வரை செல்ல படுக்கை வசதி ரூ.1170 (ரூ.395), மூன்றடுக்கு ஏசி ரூ.3370 (ரூ.1040), இரண்டடுக்கு ஏசி ரூ.5430 (ரூ.1460) என்று விமான கட்டணத்தை மிஞ்சும் அளவுக்கு மக்கள் பணத்தை ரயில்வே சுரண்டியுள்ளது.
இதை விட மிகப்பெரிய வேடிக்கை பெட்டிகளில் சைடு லோயர் டிக்கெட் அனைத்தும் ஆர்ஏசி வகையில் வழங்கப்பட்டு அவர்கள் யாருக்கும் படுக்கை வசதி செய்து கொடுக்காமல் அப்படியே ஒரே படுக்கையில் 2 பேருக்கு இடம் அளித்து அதிலும் லாபம் பார்க்கிறது ரயில்வே. ஒரு மாதத்திற்கு முன்பு முன்பதிவு செய்து ஆர்ஏசி இருந்தாலும் படுக்கை வசதி எந்த பயணிக்கும் கிடைப்பதில்லை. இப்படி ஒரு மெகா கொடுமையை ரயில்வே துறை செய்து வருவது மிகவும் வேதனை.
மேலும் செய்திகள்
தமிழகம் ஒளிர்கிறது
தமிழர் பெருமை
வழக்காடு மொழி தமிழ்
கடன் என்னாகும்...?
ரஷ்ய ஆயுதம்
விளையாட்டில் வளர்ச்சி
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!