சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்... நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால் பதவி தப்பியது!!
2022-06-07@ 10:32:29

லண்டன் : நம்பிக்கை வாக்கெடுப்பில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றுள்ளார். இங்கிலாந்து பிரதமராக 2019ம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். 2020ம் ஆண்டு கொரோனா முதல் அலையின் போது, ஊரடங்கு சட்டத்தை மீறி லண்டனில் பிரதமரின் அலுவலக இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோரை அழைத்து போரிஸ் ஜான்சன் கருத்தரங்கம் நடத்தினார். இதற்கு கண்டனம் எழுந்ததால் தவறுக்கு போரிஸ் ஜான்சன், மன்னிப்பு கோரினார். இதற்கிடையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் 2021ல் ஏப்ரலில் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கின் போது, பிரதமர் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியது பேசும் பொருள் ஆனது.
இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இது குறித்து லண்டன் மெட்ரோபொலிட்டன் போலீசார் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த 2 விவகாரங்களையும் முன்வைத்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக சொந்த கட்சியினரே பதவி விலகும் படி வலியுறுத்தினர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எம்பிக்கள் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். அவருக்கு 59% எம்பிக்கள் வாக்களித்தனர். இதையடுத்து அந்நாட்டின் சட்டப்படி அடுத்த ஓராண்டுக்கு போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாது.
மேலும் செய்திகள்
மசூதி குண்டுவெடிப்பில் 100 பேர் பலி: இந்தியாவில் கூட இப்படி நடப்பதில்லை! பாகிஸ்தான் அமைச்சர் வேதனை
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஊழியர்களுக்கு போனஸை வாரி வழங்கிய சீன நிறுவனம்
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் கடும் உறைபனி: வெள்ளியை உருக்கி ஊற்றியது போல காட்சியளிக்கும் மரங்கள்
ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கிய சீன நிறுவனம்: லாபம் பெருகியதை அடுத்து ரொக்கமாகவே போனஸ்
பாலியல் வழக்கில் சிக்கிய நேபாள முன்னாள் கிரிக்கெட் கேப்டன்: மீது விதித்த தடையை நீக்க முடிவு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.51 கோடியாக அதிகரிப்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!