SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொய் நிலைக்காது

2022-06-07@ 00:53:18

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறார். இதனால் மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. அரசு அறிவித்து வரும் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. கல்வி, சுகாதாரம், வேளாண்மை, சுற்றுச்சூழல், மருத்துவ உட்கட்டமைப்பு, தொழில் வளம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் வளர்ச்சியை நோக்கி பயணிக்க துவங்கியுள்ளது. அனைத்து துறைக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயத்துக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சி காலத்தில் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டனர். விவசாயம் செய்வதே பெரும் சவாலாக கடந்த ஆட்சியில் இருந்ததை மறந்து விட முடியாது. தற்போது விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இது விவசாயிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதால், விவசாயம் செய்ய ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு துறையும் வளர்ச்சியில் தன்னிறைவு அடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக மக்களை சென்றடைகிறது. திட்டங்கள் மட்டும் அல்லாமல் மக்களின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிக சிறப்பாக இருக்கிறது. மாநிலத்தில் ஏதாவது, சிறிய பிரச்னை என்றாலும், அதற்கு உடனே தீர்வு காணப்படுகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதால் தான், முதலீடுகள் குவிந்து வருகின்றன. இதனால் விரைவில் தமிழகம் வளர்ச்சியில் முதல் இடத்தை பிடிக்கும். முக்கியமாக, தமிழகம் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருவது இங்குள்ள சிலருக்கு பிடிக்கவில்லை. அரசியல் ரீதியாக தங்களின் இருப்பை காட்டிக் கொள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை அவர்கள் கூறி வருகின்றனர். குறை சொல்ல முடியாத அளவுக்கு மிக சிறப்பாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் திட்டம் நாடு கடந்தும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை அவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. பொய்கள் மூலம் வன்முறையை தூண்டும் வேலையில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

இவர்களின் உண்மையான நோக்கம் தமிழகத்தில் வன்முறையை ஏற்படுத்தி, அதன் மூலம் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பது தான். மக்கள் தெளிவாக உள்ளனர். இவர்கள் சொல்லி வரும் பொய்களை மக்கள் கண்டு கொள்வது கிடையாது. சட்டம்- ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டனர். அது எதுவும் எடுபடவில்லை. தற்போது  பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் மக்களை ஏமாற்றும் வேலையில் இறங்கியுள்ளனர். இவர்கள் மூலம் தமிழகத்திற்கு ஒரு நன்மையும் கிடைக்க போவதில்லை. இவர்களின் ஒரே குறிக்கோள், பிரச்னையை ஏற்படுத்தி மக்களை திசை திருப்ப வேண்டும் என்பது தான். தமிழகத்தில் அது ஒரு போதும் பலிக்காது. எக்காலத்திலும் மக்களின் செல்வாக்கை இவர்களால் பெற முடியாது. இவர்களின் அரசியல் நாடகம் தமிழக மக்களிடம் எடுபடாது. முக்கியமாக, பொய்கள் நீண்ட காலத்திற்கு நிலைக்காது என்பதை அவர்கள் அழுத்தமாக புரிந்து கொள்ள வேண்டும்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்