SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஞ்சள் பைகளுக்கு மவுசு

2022-06-06@ 00:01:32

இந்தியாவை அச்சுறுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக பிளாஸ்டிக்குகள் உள்ளன. போதிய கட்டமைப்பு வசதி இல்லாத நகர்ப்புறங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பதற்கும் பிளாஸ்டிக் குப்பைகளே காரணமாக அமைகின்றன. கடலில் கலக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும் கூட தீங்கு விளைவிக்கின்றன. இந்நிலையில் கடந்த ஓராண்டாகவே தமிழகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்புக்கான திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மிகவும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மஞ்சள் பை திட்டத்தை முதல்வர் முன்னெடுத்து வருகிறார்.

‘‘மக்கும் மஞ்சள் பைகளால் மண்ணை காப்போம்’’ என அவர் டிவிட்டர் பக்கத்தில் தமிழ் மண்ணை காக்க அழைப்பும் விடுத்திருந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘‘மீண்டும் மஞ்சள் பை’’ திட்டம் பொதுமக்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டில் இருந்து புறப்படும்போதே மஞ்சள் பைகளை கையோடு எடுத்து கிளம்பும் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிய பின்னர், மஞ்சள் பைகளில் அவற்றை எடுத்து செல்கின்றனர். மஞ்சள் பை திட்டம் வருகைக்கு பின்னர் பிளாஸ்டிக் பயன்பாடு 20 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மஞ்சள் பை திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது. தானியங்கி இயந்திரங்கள் மூலம் மஞ்சள் பைகளை வழங்குவதற்கான திட்டம் தமிழகம் முழுவதும் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் ரூ.10 செலுத்தினால், மஞ்சள் பை பொதுமக்கள் கைக்கு வந்துவிடும். சிஎஸ்ஆர் நிதியை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் தமிழக அரசு இத்தகைய இயந்திரங்களை பொருத்தி வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான மார்க்கெட், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் ஆன்மிக திருத்தலங்களில் மஞ்சள் பைகள் தாராளமாக கிடைத்தால், பிளாஸ்டிக் பயன்பாடு பெருமளவு ஓயும். இறைச்சி கடைகளுக்கும் இதை விஸ்தரிப்பது அவசியம்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 14 வகையான நெகிழி பொருட்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் குறித்த சோதனை ஓரளவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது மீண்டும் முழுவீச்சில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் அமலுக்கு வந்துள்ளன. தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க போதிய விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்புக்காக 172 தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.105 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

1,172 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்கள்  மூடப்பட்டதால் பல்வேறு இடங்களில் குடிசைத் தொழிலாக பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அத்தகைய இடங்களில் பிளாஸ்டிக் தயாரிக்க  பயன்படும் இயந்திரங்களைகூட வெளியே எடுக்க முடியாத அளவுக்கு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் மஞ்சள் பைகளை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு பரிசீலிப்பது நல்லது. மஞ்சள் பைகள் அதிகளவு மக்கள் மத்தியில் புழக்கத்திற்கு வரும்போது, பிளாஸ்டிக் பைகள் தானாகவே விடைபெறும்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்