10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ‘ஆப்சென்ட்’ மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு; பள்ளிக்கல்வித்துறை தகவல்
2022-06-04@ 21:43:18

வேலூர்: 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஆப்சென்டானவர்களை உடனடி தேர்வில் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. இதில் முதல் நாள் நடந்த மொழிப்பாடத்தேர்வையே சராசரியாக 40 ஆயிரம் பேருக்கு மேல் எழுதாமல் ஆப்சென்டாகியிருந்தனர். மூன்று பொதுத்தேர்வுகளும் முடிந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 லட்சத்து 25 ஆயிரத்து 534 பேரும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 லட்சத்து 58 ஆயிரத்து 641 பேரும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 4 லட்சத்து 95 ஆயிரத்து 292 பேரும் எழுதவில்லை என்று தெரியவந்தது.
இது பள்ளிக்கல்வித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் பொதுத்தேர்வை எழுதாமல் ஆப்சென்டானவர்களை உடனடி தேர்வில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான படிவங்களையும் அது வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, ‘கடந்த 2 ஆண்டுகளாக நீடித்த கொரோனா கால நெருக்கடியால் மாணவ, மாணவிகள் மத்தியில் மனரீதியில் பெரும் பாதிப்ைப ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தேர்வின் மீது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் என்றால் நடுத்தர, அடித்தட்டு குடும்பங்கள் கொரோனா கால நெருக்கடியால் பொருளாதார ரீதியில் சிக்கலை சந்தித்துள்ளன. அவர்களின் குடும்பங்களில் 15 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் குடும்ப பாரத்தை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே நாங்கள் அவர்களை அணுகியபோது சரியான பதில் கிடைக்கவில்லை. அதோடு பல குடும்பங்கள் வெளியூரில் செட்டிலாகியுள்ளனர்’ என்றனர்.
மேலும் செய்திகள்
புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவை இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் 31.66 லட்சம் உண்டியல் காணிக்கை
பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்த நிலை காட்சி: ‘தத்ரூபமாக’ மாணவிகள் நடித்துக் காட்டினர்
மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக் கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்; பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை: பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம்..!
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடக்கம்!!
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!