சில்லி பாயின்ட்...
2022-06-04@ 01:08:03

* கஜகஸ்தானின் அல்மாத்தி நகரில் நடைபெறும் சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 62 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இறுதிப் போட்டியில் அவர் உள்ளூர் நட்சத்திரம் கஸ்னெட்சோவாவை போராடி வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை மான்சி 57 கிலோ எடை பிரிவு பைனலில் கஜகஸ்தானின் எம்மா டிஸ்ஸினாவை வீழ்த்தி முதலிடம் பிடித்தார். இந்த தொடரில் இந்தியா இதுவரை 4 பதக்கங்களை வென்றுள்ளது.
* இந்திய அணியுடன் டி20 தொடரில் மோத உள்ள தென் ஆப்ரிக்க வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், யாருக்கும் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் டெல்லி, அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று பயிற்சி செய்தனர். முதல் டி20 போட்டி ஜூன் 9ம் தேதி இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ள இலங்கை அணியின் பந்துவீச்சு வியூக ஆலோசகராக முன்னாள் வேகம் லசித் மலிங்கா (38 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். முதல் டி20 போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் ஜூன் 7ம் தேதி நடைபெற உள்ளது.
* பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப் - ஜெஸ்ஸிகா பெகுலா இணை 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் சக வீராங்கனைகள் மேடிசன் கீஸ் - டெய்லர் டவுன்செண்ட் ஜோடியை வீழ்தியது. இறுதிப் போட்டியில் கோகோ - பெகுலா ஜோடி பிரான்சின் கரோலின் கார்சியா - கிறிஸ்டினா மிளாடெனோவிச் ஜோடியை எதிர்கொள்கிறது. பைனலில் நடால்: பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தகுதி பெற்றார். அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) உடன் நேற்று நடந்த அரையிறுதியில் நடால் 7-6 (10-8), 6-6 என முன்னிலை வகித்த நிலையில், காயம் காரணமாக ஸ்வெரவ் வெளியேறினார். இரு வீரர்களும் கடுமையாகப் போராடியதால் 3 மணி, 13 நிமிடத்துக்கு பிறகும் 2வது செட் கூட முடியாதது குறிப்பிடத்தக்கது.
Tags:
சில்லி பாயின்ட்...மேலும் செய்திகள்
முதல் ஒரு நாள் போட்டி இங்கிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா: ஜேசன்ராய் சதம் வீண்
ஆடுகளம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது; கூடுதலாக 25 ரன் கொடுத்தது தான் தோல்விக்கு காரணம்: ஹர்திக் பாண்டியா பேட்டி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சவுராஷ்டிராவை வீழ்த்தியது தமிழ் நாடு: அஜித் ராம் அசத்தல் பந்துவீச்சு
கான்வே, டேரில் மிட்செல் அரை சதம் நியூசிலாந்து ரன் குவிப்பு
சில்லி பாயின்ட்...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது இடத்துடன் விடைபெற்றார் சானியா
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!