SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னோடி திட்டம்

2022-06-04@ 00:13:57

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை நேற்று துவக்கி வைத்துள்ளார். தொடர்ந்து தீவிர தூய்மைப்பணியும் தொடங்கப்பட்டது. முதல்வர் தலைமையில் மாணவ, மாணவிகள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள், நகரங்களின் தூய்மை குறித்த உறுதிமொழி ஏற்றனர்.

2022-23ம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக்கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இத்திட்டம் நேற்று துவக்கப்பட்டுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தேசிய சமுதாய நலப்பணி மற்றும் தேசிய பசுமைப்படையை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் இத்தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் செயல்படுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மிகப்பெரிய அளவில் இத்தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரபலங்களைக் கொண்டு, மக்களுக்கு தூய்மையின் அவசியத்தை பற்றி வலியுறுத்தும் விதமாக பூங்காக்களில் கூட்டங்கள் நடத்தவும், அவர்களை கொண்டு தூய்மை பணி மற்றும் சுத்தம் தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கவும், மஞ்சப்பையின் அவசியத்தை உணர்த்தி, மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வணிக வரித்துறை வாயிலாக அனைத்து கடை உரிமையாளர்கள், வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இத்தூய்மை பணியில் முழுமையாக பங்கெடுக்க வலியுறுத்தவும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வாயிலாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகளை விளக்கி, மீண்டும் மஞ்சப்பை உபயோகப்படுத்தும் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வாயிலாக அதன் கட்டுப்பாட்டில் உள்ள உழவர் சந்தைகளில் தினந்தோறும் சேகரமாகும் காய்கறி கழிவுகளை, உழவர் சந்தைகளிலேயே மக்கச்செய்து குப்பையாக மாற்றும் பணிகளை துவக்கிடவும் இத்திட்டம் உதவுகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துச்செல்லும் ‘‘திராவிட மாடல்’’ ஆட்சியின் மகத்தான திட்டங்களில் இது ஒரு முக்கியமான திட்டம். எந்த ஒரு தொற்று பரவினாலும் அதற்கு ஒரு முக்கிய காரணமாக சுற்றுப்புற தூய்மையின்மை அமைந்துள்ளது. எனவே ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்விடத்தின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அதற்கான ஒரு உந்துதலை இந்த திட்டம் ஏற்படுத்தும்.

ஒவ்வொரு மாதமும் 2 நாட்கள் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றாலும், இது ஒரு மக்கள் இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு முன்னோடி திட்டமாகவும், அடுத்த தலைமுறையினருக்கு தூய்மை எனும் நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் ஒரு சிறந்த திட்டமாகவும் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” அமைந்து சிறப்பு பெறும்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்