SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயிலில் கூடுதல் லக்கேஜ் எடுத்து சென்றால் 6 மடங்கு அபராதம்; ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

2022-06-03@ 18:32:28

புதுடெல்லி: ரயில் பயணிகள் ரயிலில் கூடுதல் லக்கேஜ் எடுத்து சென்றால், 6 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே விதிகளின்படி, ரயில்களில் பயணிக்கும் பயணிகள் தாங்கள் பயணிக்கும் ரயில் பெட்டியில் 40 கிலோ முதல் 70 கிலோ வரை எடையுள்ள லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம். கூடுதல் பொருட்களை எடுத்து சென்றால் சம்பந்தப்பட்ட பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கனவே இருந்த அபாராத தொகையை காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ரயிலில் பயணம் செய்யும் போது அதிக லக்கேஜ்களை பயணிகள் எடுத்துச் செல்ல வேண்டாம். அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்து சென்றால், அதற்கான முன்பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும். குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 செலுத்த வேண்டும்.

ரயில் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன், பயணிகள்  தங்களது பொருட்கள் குறித்த விபரங்களை முன்பதிவு நிலையத்தின் லக்கேஜ் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது முன்கூட்டியே லக்கேஜ் விபரங்களை முன்பதிவு செய்யலாம். குறைந்த பட்ச அத்தியாவசிய பொருட்களை கொண்டு  பயணிக்குமாறு பயணிகளை கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

  • kolathur-chennai

    சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

  • china-factory-fire-22

    சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்