தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல்: வேளாண் இணை இயக்குநர் ஆலோசனை
2022-06-02@ 19:11:11

நெல்லை: கோடையில் தென்னையில் சுருள் வௌ்ளை ஈயின் தாக்குதல் அதிகமாக காணப்படும். அதனை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தும் முறை குறித்து வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திர பாண்டியன் கூறியிருப்பதாவது:-
சுருள் வௌ்ளை ஈக்களின் வாழ்க்கை சுழற்சி மொத்தம் 30 நாட்களாகும். பெண் வௌ்ளை ஈக்கள் இலைகளின் கீழ்பகுதியில் சுருள், சுருளாக நீள்வட்ட வடிவில் முட்டைகளை இடும். இப்பூச்சிகளின் இளம்பருவம் இரண்டு நிலைகளை கொண்டது. இவை தென்னை மரங்களில் ஓலைகளின் அடியிலிருந்து கொண்டு தென்னை இலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சுவதுடன் தேன் போன்ற திரவக் கழிவுகளையும் வெளியேற்றுவதால் கீழ்மட்ட அடுக்கில் உள்ள ஓலைகளின் மேல் பரப்பில் கரும்பூஞ்சானம் படர்ந்து காணப்படும்.
இப்பூச்சிகளால் இலைகளின் சாறு உறிஞ்சப்பட்டு மரத்தின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இப்பூச்சியை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த முதலில் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். ஆரம்ப நிலையில் இப்பூச்சிகளை ஏக்கருக்கு 2 விளக்கு பொறிகள் என்ற அளவில் அமைத்து மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை கண்காணித்து கவர்ந்து அழிக்கலாம். மஞ்சள் நிறமானது வளர்ச்சியடைந்த வௌ்ளை ஈக்களை கவர்வதால் மஞ்சள் ஒட்டுப்பொறிகளை ஏக்கருக்கு 7-10 என்ற அளவில் இரு மரங்களுக்கு இடையில் 6அடி உயரத்தில் தொங்கவிட்டு கட்டுப்படுத்தலாம்.
தாக்கப்பட்ட தென்னை மரங்களில் இலைகளின் மேல் விசைத் தெளிப்பான்களை கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலம் ஓலைகளின் உட்பகுதியிலுள்ள பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். 1 லிட்டருக்கு 25 கிராம் என்ற அளவில் மைதா மாவு பசையை தண்ணீரில் கரைத்து கரும்பூஞ்சாணத்தின் மீது தெளிப்பதன் மூலம் கரும்பூஞ்சாணத்தினை அப்புறப்படுத்தலாம்.
இப்பூச்சிகளுக்கு எதிராக இயற்கையிலேயே காணப்படும் நன்மை பூச்சிகளான பச்சை கண்ணாடி இறக்கை பூச்சிகள் பொறிவண்டுகள், ஒட்டுண்ணி குழவிகள் முதலியவற்றை தோப்புகளில் விடலாம். என்கார்சியா போன்ற இயற்கை எதிரிகள் தென்னந்தோப்புகளில் இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும், இவற்றை பரவ விடுவதன் மூலம் சுருள்வௌ்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.
தேவைப்பட்டால் தாவரம் சார்ந்த பூச்சிவிரட்டிகளான 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசல், 10 சதவீதம் வேப்ப இலை கரைசல், 0.5 சதவீதம் வேப்ப எண்ணெய் கரைசல், மீன் எண்ணெய் சோப்பு கரைசல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுக்குள் கொண்டு வரலாம். ராசாயன பூச்சி கொல்லிகளை தவிர்த்து இயற்கையிலேயே இப்பூச்சிகளுக்கு எதிராக செயல்படும் காரணிகளை ஊக்குவிப்பதன் மூலம் இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் உயர்ந்தது
ரூ.784 கோடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
குடிநீர் தொட்டியில் இன்ஜினியர் சடலம் மீட்பு அமைச்சர், டிஐஜி நேரில் விசாரணை
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் மண்டபத்துக்கு வந்தவர் மாப்பிள்ளை ஆனார்
விஐடி பல்கலையில் கலைஞர் மாணவர் விடுதி, பேர்ல் ஆராய்ச்சி கட்டிடம் திறப்பு தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி: தனியார் கல்வி நிறுவனங்களும் பங்களிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திருப்பூரில் வட இந்தியர்கள் உள்ளூர் ஆட்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!