SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயம் செழிக்கட்டும்

2022-06-01@ 00:42:01

மே 24ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டதுடன் நின்றுவிடவில்லை. 27ம் தேதி கல்லணைக்கு தண்ணீர் வந்து விட்டது என்ற செய்தி அறிந்ததும் கடைமடை விவசாயிகள் பற்றிய கவலை வந்துவிட்டது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை சாகுபடி சிறப்பாக மேற்கொள்ள வசதியாக ஆறு,குளம், கால்வாய்களை தூர்வாரி பராமரிக்க ரூ.80 கோடி நிதி மராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. ஏப்ரல் 13ம் தேதி முதல் பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்தன. அந்த பணிகள் எப்படி நடந்துள்ளது? 75 ஆண்டுகள் இல்லாதவகையில் முன்கூட்டியே மேட்டூர் அணை திறந்தாலும், அதன்பயன் கடைமடை விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில் கிடைக்குமா என்பதை நேரில் பார்த்து ஆய்வு செய்ய புறப்பட்டு விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

திருச்சியில் இருந்து கார் மூலம் புறப்பட்ட அவர் வழிநெடுகிலும் உள்ள மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினத்தில் நடந்த பணிகள் அத்தனையையும் பார்வையிட்டு மனம் நிறைவு கொண்டார். நேற்று மீண்டும் மராமத்து பணிகள் நடைபெறும் டெல்டா பகுதியில் உள்ள அத்தனை இடங்களையும் ஆய்வு செய்து இருக்கிறார். விவசாயிகளின் கவலை புரிந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வர் பதவி ஏற்ற பிறகுதான் விவசாயிகளை சந்திப்பவர் அல்ல அவர். எப்போதும் அவர் மக்களுடன் இருப்பவர். எப்போதும் அவர் பயணப்பட்டுக்கொண்டு இருப்பவர். தலைநகரான சென்னையில் இருந்து கொண்டு அரசியல் செய்பவர் அல்ல. சென்னையில் இருந்தாலும் கடைக்கோடி கன்னியாகுமரி மாவட்ட மக்களின் உணர்வுகளையும் அறிந்தவர்.

ஒவ்வொரு மாவட்ட மக்களையும் புரிந்து, அறிந்து அவர்களை உரிய நேரத்தில் தேடிச்செல்பவர். எப்போதும் களத்தில் இருக்கும் அவர் முதல்வரானதும் மாறிவிடுவாரா என்ன?. இப்போது இன்னும் அதிக கவலை, கடமை உணர்வு அவரை தொற்றிக்கொண்டு விட்டது. அதனால் தான் அமைச்சர்கள், அதிகாரிகள் வசம் உரிய பொறுப்புகளை ஒப்படைத்து இருந்தாலும், அவர்கள் பணிகளை திறம்பட முடித்து விட்டார்களா என்று கேட்டறிந்தாலும், தானே நேரில் பார்த்து மக்களின், விவசாயிகளின் வேறு கோரிக்கைகள் இருந்தால் பெற்று திரும்பிடும் வகையில் இந்த பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்து இருக்கிறார்.

இந்த பயணம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்னும் வலுசேர்க்கும் வகையில் அமைந்து இருக்கும் என்றால் மிகை இல்லை. ஏனென்றால் நேரில் சென்று முதல்வர் ஆய்வு செய்யும் போது, நேர்த்தியான பணிகள் முடித்த அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் பணிக்கு ஒரு கவுரவம் நிச்சயம் கிடைக்கும். அடுத்த ஆண்டு மராமத்து பணிகளை மேற்கொள்ளும்போது இன்னும் அதிக கவனத்துடன், நவீன முறைகளை பயன்படுத்தவும், முதல்வரின் பாராட்டை நேரில் பெறவும் வழிவகுக்கும். அந்த உற்சாகம் அரசு அதிகாரிகளை தொற்றிக்கொள்ளும். அது அரசு எந்திரத்தை மட்டுமல்ல, விவசாயத்தையும் செழிப்புடன் இயங்க வைக்கும்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

  • raksha-rakhi-8

    ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்