SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனுமதியின்றி கார் ரேஸ்: மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்க்கு ரூ5,000 அபராதம்

2022-05-31@ 16:46:12

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜோஜு ஜார்ஜ். ஜோசப், நாயாட்டு உள்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் தனுஷின் ஜகமே தந்திரம் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் இடுக்கி அருகே வாகமண் பகுதியிலுள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் அனுமதியின்றி சிலருடன் கார் ரேசில் ஈடுபட்டார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து இடுக்கி மாவட்ட வட்டார போக்குவரத்துத்துறை, நடிகர் ஜோஜு ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்தது.

மேலும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அவருக்கு மோட்டார் வாகனத்துறை அதிகாரி உத்தரவிட்டார். இதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் இடுக்கி வட்டார போக்குவரத்து அதிகாரி முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது தேயிலை தோட்டத்தில் கார் ரேஸ் நடத்த அனுமதி இல்லை என்பது குறித்து தனக்கு தெரியாது என்று அவர் கூறினார். ஆனாலும் சட்டத்தை மீறியதால் அவருக்கு ரூ5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையை நேற்று ஜோஜு ஜார்ஜ் ஆன்லைன் மூலம் கட்டினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china-corona-26

    தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!

  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

  • kolathur-chennai

    சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

  • china-factory-fire-22

    சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்