நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகம்: ஐகோர்ட்டில் பொதுநல மனு
2022-05-31@ 00:10:32

சென்னை: பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் 2013ம் ஆண்டு அம்மா உணவக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 50 கிலோ மீட்டர் இடைவெளியில் தனியார் உணவகங்கள் அமைந்துள்ளன. அவற்றில் தரமற்ற உணவுகள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. சாதாரண பயணிகளால் இந்த விலையில் உணவுகளை வாங்க முடியாது. எனவே, பயணிகளுக்கும், லாரி, டெம்போ போன்ற சரக்கு வாகன டிரைவர்கள், ஊழியர்களுக்கும் குறைந்த விலையில் உணவுகள் வழங்கும் வகையில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தூரத்தில் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும். போக்குவரத்து அல்லாத வாகனங்களில் ஓட்டுனர்கள் குறைந்த ஊதியம் பெறுகிறார்கள். சாலையோர உணவகங்களில் அதிக விலை கொடுத்தாலும், அவர்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதில்லை. சுகாதாரமான உணவை குறைந்த விலைக்கு வழங்க ஏதுவாக அம்மா உணவகங்களை அமைக்க கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறையில் திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்..!
குமரி, நெல்லை உள்பட தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அதிமுக சார்பில் ஒரே அணியாக ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு: அண்ணாமலை பேட்டி
ஒன்றுபட்ட அதிமுக அவசியம்!: ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வலியுறுத்தினோம்.. பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி
தொடர்மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: உழவர்களுக்கு இழப்பீடு வழங்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!
ஆசிரியர் கி.வீரமணியின் சமூகநீதி விழிப்புணர்வு பயணம் வெற்றி பெறட்டும்: வைகோ வாழ்த்து
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!