SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேண்டாமே... திணிப்பு

2022-05-30@ 01:26:30

உலகில் தோன்றிய மிகத் தொன்மையான மொழிகளுள் ஒன்று. முதலில் அச்சில் ஏறிய இந்திய மொழி. இந்தியாவுக்கு வெளியே ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்ட ஒரே மொழி. இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, தென் ஆப்ரிக்கா, பிஜிட் தீவு, மொரிஷியஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பேசப்படும் மொழி. இலங்கையின் இரு தேசிய மொழிகளுள் ஒன்றாக உள்ள மொழி. சிங்கப்பூரின் நான்கு ஆட்சிமொழிகளுள் ஒன்று. மலேசியாவின் நான்கு பள்ளிக்கல்வி மொழிகளில் இந்த மொழியும் உண்டு. இலங்கை, சிங்கப்பூர், மொரிசியஷ் ஆகிய நாடுகளின் பணத்தாள்களில் அச்சிடப்பட்டுள்ள மொழி....  அந்த மொழிக்கு அமுதென்று பேரும் உண்டு. அந்த இன்பத் தமிழ் மொழியின் பெருமையை உயர்த்திப் பிடிக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு.

 இந்தியாவில் இந்தியைக் கட்டாயமாக்கும் முயற்சிகள் நடந்தபோது, தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் திமுக முழுமையாக ஈடுபட்டது. ராட்டங்களை ஒடுக்க தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகே, கட்டாய இந்தித் திணிப்பைக் கைவிட அன்ைறய ஒன்றிய அரசு முடிவெடுத்தது. காலங்கள் மாறி... தற்போது மீண்டும் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு, பல்வேறு வடிவங்களிலும் இந்தியை திணிக்கும் முயற்சியை செயல்படுத்த முயற்சிக்கிறது. புதிய கல்விக் கொள்கை வழியே, மறைமுகமாக இந்தி மொழியை ஒன்றிய அரசு திணிக்க முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு தமிழக அரசியலில் அனலைக் கிளப்பி வருகிறது. இந்தி மொழியை நாடு முழுக்கப் பரப்பும் தனது நோக்கங்களின் ஒரு பகுதியாகவே, `இந்தி வளர்ச்சி தினம்’ என்ற ஒன்றையே ஒன்றிய அரசு கொண்டாடி வருகிறது. `இந்தி மொழி வளர்ச்சியில் அக்கறை காட்டுவோம்’ என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிமொழி எடுத்திருக்கிறார்.

கடந்த சில வருடங்களாகவே தமிழ்நாட்டில் இந்தி மொழியைத் திணிக்கும் போக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இங்குள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் பெரும்பான்மையாக வட இந்தியர்களையே பணியமர்த்துகின்றனர். இவ்வாறு நியமிக்கப்படும் மொழி தெரியாத அலுவலர்களால் பொதுமக்கள் அடையும் சிரமங்கள் கணக்கில் அடங்காது. ரயில்வே துறையில், பணியில் இருந்த வட இந்திய அதிகாரி, தமிழ் மொழியில் வந்த தகவல் தொடர்பு அறிவிப்பை புரிந்து கொள்ளாததால், விபத்து நேரிடும் அபாயம் ஏற்பட்டு... கடைசி நேரத்தில் ‘தலை தப்பிய’ சம்பவங்கள் இங்கு நடந்திருக்கிறது.

பிரதமர் துவங்கி, ஒன்றிய அரசின் அமைச்சர்கள் அனைவரும் தமிழ் மொழி குறித்து மேடைகளில் புகழ்கின்றனர். ஆனால், சமஸ்கிருத மொழி மேம்பாட்டிற்காக பல்லாயிரம் கோடிகள் ஒதுக்கும் ஒன்றிய அரசு, தமிழ் மொழி வளர்ச்சிக்கு சில கோடிகள் மட்டுமே ஒதுக்குகிறது. இதில் இருந்தே, தமிழ் மொழி மீது காட்டும் பாரபட்சத்தைப் புரிந்து கொள்ளமுடியும். சென்னையில் நடந்த கலைஞர் உருவச்சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, ‘‘எந்த மொழியையும் திணிக்கக் கூடாது...’’ என்று குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்க மாற்றம்.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்