SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசிய கோப்பை ஹாக்கி சூப்பர்-4 சுற்றில் இந்தியா அசத்தல்: ஜப்பானுக்கு பதிலடி

2022-05-29@ 00:57:52

ஜகார்தா: ஆசிய  கோப்பை ஹாக்கிப் போட்டித் தொடரின் சூப்பர்-4 சுற்றில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது. இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் நடந்து வரும் இந்த தொடரின் ஏ பிரிவில்  இடம்  பெற்றிருந்த நடப்பு சாம்பியன் இந்தியா, முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் டிரா செய்தது.

அடுத்து ஜப்பானிடம் தோல்வியை சந்தித்தது. சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேற இந்தோனேசியாவை  16 கோல் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டிய கட்டாயம். ஆனால், அதை சாதித்துக் காட்டி சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா முன்னேறியது. மேலும் ஜப்பான், மலேசியா, கொரியா அணிகளும் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் நேற்று நடந்த முதல் சூப்பர்-4 ஆட்டத்தில்  மலேசியா-கொரியா மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

தொடர்ந்து  2வது ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதின. அதில் இந்தியா  2-1  என்ற கோல் கணக்கில்  ஜப்பானை வீழ்த்தியது. அதன்மூலம் லீக் சுற்றில் ஜப்பானிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.சூப்பர்-4 சுற்றில்  இந்தியா -  மலேசியா மோதும் போட்டி இன்று மாலை 5.00 மணிக்கு தொடங்குகிறது.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்