இக்கட்டான நேரத்தில் உதவியதற்காக இந்தியாவுக்கு ரணில் பாராட்டு
2022-05-28@ 17:03:40

கொழும்பு: இலங்கையின் இக்கட்டான நேரத்தில் இந்தியா உதவியதற்கு நன்றி தெரிவித்து அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரம சிங்கே பதவிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மூத்த அரசியல்வாதிகள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை ேநற்று சந்தித்தனர். அப்போது அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்து கலந்துரையாடினர். அதிபருக்கு வழங்கப்படும் அதிகபட்ச அதிகாரங்களை குறைக்கும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை விரைவில் நிறைவேற்றுவது ெதாடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்ட பதிவில், ‘இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தொலைபேசியில் பேசினேன். இக்கட்டான நேரத்தில் இந்தியா வழங்கிய உதவியை எங்களுடைய நாட்டு மக்கள் சார்பில் பாராட்டுகிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதை எதிர்நோக்கி உள்ளேன். குவாட் மாநாட்டில் இலங்கைக்கு உதவுவது தொடர்பான முன்மொழிவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
எகிப்து சர்ச்சில் தீ விபத்து 41 பேர் பலி
தைரியம் என்றால் இப்படி இருக்கணும், ஜெய்சங்கரின் வீடியோவை மக்களுக்கு காட்டிய இம்ரான்; பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தானுடன் போர் பயிற்சியா? இலங்கை அரசு மறுப்பு
அமெரிக்க எம்பி.க்கள் தைவானில் பயணம்; சீனா கடும் எதிர்ப்பு
பைடன் அதிர்ச்சி
ருஷ்டிக்கு வைக்கப்பட்ட வென்டிலேட்டர் நீக்கம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!