பாஜக நிர்வாகிகள் ஸ்டேஷனுக்குள் நுழைய தடை; உ.பி காவல் நிலையம் வெளியே பேனர் வைப்பு
2022-05-28@ 15:09:08

மீரட்: மீரட் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்கு வெளியே, பாஜக நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு நுழைய தடை விதித்து பேனர் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்கு வெளியே, பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளியே வைக்கப்பட்டுள்ள பேனரில் (இந்தியில் எழுதப்பட்டுள்ளது), ‘பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் காவல் நிலையத்திற்குள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று எழுதப்பட்டுள்ளது. மேலும், காவல் நிலையத்தின் நிலைய காவல் அதிகாரியின் பெயரும் எழுதப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமாஜ்வாதி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், மேற்கண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் முதல்முறையாக, ஆளும் கட்சியினர் காவல் நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதான் பாஜக அரசின் நிலை’ என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் சவுத்ரி கூறுகையில், ‘அடையாளம் தெரியாத சிலரால் காவல் நிலையத்திற்கு வெளியே பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
மேலும் செய்திகள்
இந்தியாவின் அடையாளங்களாக திகழும் காந்தி, நேரு போன்ற தலைவர்களை பிரதமர் மோடி இழிவுபடுத்திவிட்டார்: காங். தலைவர் சோனியாகாந்தி கண்டனம்..!!
சவால்களை கடந்து சாதனை படைக்கிறது; உலகத்துக்கே நம்பிக்கையாக திகழ்கிறது இந்தியா: சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி பெருமிதம்..!
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி: வானிலிருந்து பொழிந்த 'பூ' மழை..!
பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம் திருவாரூர் மாவட்ட பாஜ தலைவர் கைது
சோனியாவுக்கு கொரோனா காங். அலுவலகத்தில் கொடியேற்றுவது யார்?
கர்நாடக அரசு விளம்பரத்தில் நேருவின் பெயர் புறக்கணிப்பு: காங்கிரஸ் கொந்தளிப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!