பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கு பணிந்தது ஆஸி. அரசு!: இலங்கை தமிழர் குடும்பத்திற்கு ஆஸி.யில் குடியேற்ற அனுமதி..!!
2022-05-28@ 14:27:21

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து இலங்கை தமிழ் குடும்பத்திற்கு அந்நாட்டு அரசு குடியேற்ற அனுமதி வழங்கி இருக்கிறது. இலங்கையை சேர்ந்த பிரியா நடராஜா என்பவரும், நடேஷ் முருகப்பர் என்பவரும் படகு மூலம் 2012ம் ஆண்டு இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா வந்தனர். அடைக்கலம் கூறி இருவரும் ஆஸ்திரேலிய அரசிடம் விண்ணப்பித்ததை அடுத்து அவர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு விசா வழங்கப்பட்டது. குடியேறிகளுக்கு வேலை வழங்கும் இறைச்சி கூடங்களை கொண்ட பில்லாயிலா நகரில் அவர்கள் கூடியேறியபோது இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.
அவர்களுக்கு கோபிகா, தார்மிகா என்ற பெண் குழந்தைகள் பிறந்தன. ஆஸ்திரேலியாவில் பிரியா நடேசனின் விண்ணப்பங்கள் பல ஆண்டு பரிசீலனைக்கு பிறகு நிராகரிக்கப்பட்டது. அகதிகள் என்ற தகுதியை பெறுவதற்கான வரைமுறைகள் அவர்களுக்கு இல்லை என ஆஸ்திரேலிய அரசு கூறிவிட்டது. 2018ம் ஆண்டு நடேஷ் முருகன் குடும்பத்தின் தற்காலிக விசா காலாவதியான போது அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சி நடந்தது. அப்போது பில்லாயிலா நகரத்தை சேர்ந்தவர்கள் நடேஷ் முருகப்பர் குடும்பத்தை நாட்டை விட்டு வெளியேற்றும் முயற்சிகளுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் அந்தோணி, நடேஷ் முருகப்பர் குடும்பத்திற்கு தனது அரசு விதிவிலக்கு அளிக்கும் என்று கூறியிருந்தார். அதன்படி ஆஸ்திரேலியாவின் புதிய அரசு பிரியா நடேஷ் முருகப்பர் குடும்பத்திற்கு விசா வழங்கியுள்ளது. அவர்கள் தற்காலிகமாக பில்லாயிலா நகரத்தில் வசிக்கவும், வேலை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்துமஸ் தீவில் தடுப்பு காவல் வைக்கப்பட்டுள்ள நடேஷ் முருகப்பர் குடும்பம் குயின்ஸ்லாந்து நகரத்திற்கு திரும்புவதற்காக 4 ஆண்டுகால போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.
மேலும் செய்திகள்
ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் இளைஞர்; அவரை பிரிந்து குமரியில் வாடும் 3 குழந்தைகள்: தங்களை காப்பாற்றுமாறு முதலமைச்சருக்கு கண்ணீர்மல்க கோரிக்கை
இலங்கையில் அவசர நிலை பிரகடனம் நீட்டிக்கப்படாது: அதிபர் ரணில் விக்ரமசிங்கே திட்டவட்டமாக அறிவிப்பு..!!
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தது சீன உளவு கப்பல்: 22ம் தேதி வரை முகாமிடும் என அறிவிப்பு
7 தைவான் அதிகாரிகளுக்கு சீனா பொருளாதார தடை
இந்தியாவின் சுதந்திர தினம்; நியூயார்க்கில் ஆடல், பாடலுடன் கொண்டாட்டம்
நில மோசடி வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!