சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா-கொடியேற்றத்துடன் தொடக்கம்
2022-05-28@ 14:12:19

தென்தாமரைகுளம் : சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் வருடந்தோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட வைகாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், காலை 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அய்யா சிவ சிவ அரகரா அரகரா என்று பக்தி கோஷமிட்டனர். பின்னர் கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார்.
குருமார்கள் பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் வக்கீல் ஜனா யுகேந்த், டாக்டர் ஜனாவைகுந்த் ஆகியோர் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகன பவனி நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.
வருகிற 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 8ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், 10ம் நாள் இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அடுத்த மாதம் 6ம் தேதி (திங்கள் கிழமை) 11ம் திருவிழா அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடையும், மதியம் உச்சி படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும், கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் 3 வேளை தலைமைப்பதியின் முன்பு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
உலகில் முதலில் எழுத்தறிவு பெற்றது தமிழ் சமூகம் தான்' விரகனூர் கல்லூரியில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பேச்சு
பொள்ளாச்சி வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ‘ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்’: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வழங்கல்
ஆபத்தை உணராமல் ஆழியார் அணை, ஆற்றுப்பகுதியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்: கண்காணித்து தடுக்க கோரிக்கை
குளித்தலை கடம்பன் துறையில் தைப்பூச திருவிழா: பட்டு போன மரத்தை அகற்றி சாலை சீரமைப்பு
மாயனூர் காவிரி கதவணை ரூ.185 கோடியில் புனரமைக்கும் பணி மீண்டும் துவங்கியது: குடிநீருக்காக 20 மதகுகளில் தண்ணீர் திறப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்: அரசு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!