டாடா கேபிடல் நிறுவனம் ஆர்த்தி ஸ்கேனில் முதலீடு
2022-05-28@ 00:58:05

சென்னை: டாடா கேபிடல் குரோத் பண்ட் நிறுவனம், ஆர்த்தி ஸ்கேனில் முதலீடு செய்துள்ளது. டாடா கேபிடல் குரோத் பண்ட் நிறுவனம், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.216 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்குகிறது. இதற்கான பரிவர்த்தனை சில தினங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2000ம் ஆண்டில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வி.கோவிந்தராஜன் என்பவரால் நிறுவப்பட்ட ஆர்த்தி ஸ்கேன்ஸ், நாடு முழுவதும் 10 மாநிலங்களில் 6 முக்கிய நகரங்களில் தனது கிளையை நிறுவியுள்ளது. மேற்கண்ட முதலீடு குறித்து ஆர்த்தி ஸ்கேன்ஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கோவிந்தராஜன் கூறுகையில், ‘‘டாடா கேபிடல் குரோத் பண்ட் நிறுவனம் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
இது, எங்களது உயர்தரமான ஆய்வக சேவையை குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வழங்க மேலும் உதவியாக இருக்கும்’’ என்றார். டாடா கேபிடல் குரோத் பண்ட் நிர்வாக பங்குதாரர் அகில் அஸ்வதி கூறுகையில், ‘‘ஆய்வக சேவையில் ஆர்த்தி ஸ்கேன் நாட்டின் முன்னணி நிறுவனமாக திகழும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’’ என்றார்.
மேலும் செய்திகள்
சற்று சரிவை காணும் தங்கவிலை... சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.38,760-க்கு விற்பனை
தொடர்ந்து ஏறுமுகம்: ஒரு சவரன் தங்கம் விலை ரூ.39,000
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.5% உயர்வு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் அபாயம்..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை..ஒரு சவரன் ரூ.38,920-க்கு விற்பனை..!!
மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை...ஒரு சவரனுக்கு ரூ.184 உயர்ந்து, ரூ.38,600-க்கு விற்பனை...அதிர்ச்சியில் மக்கள்
இன்று தங்கம் வாங்க ஏற்ற நாள்... சவரன் ரூ.144 குறைந்து ரூ.38,416-க்கு விற்பனை!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!