சிந்தாதிரிப்பேட்டை பாஜ பிரமுகர் கொலை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: கமிஷனர் சங்கர்ஜிவால் அதிரடி
2022-05-28@ 00:47:38

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் பாலசந்தர் (30). பாஜ எஸ்சி-எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்தார். இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி இரவு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட காவலர் பாலமுருகனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவுக்கு சென்ற பாலசந்தர் அங்கு நண்பர் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார்.
பி.எஸ்.ஓ பாலமுருகன் அருகிலிருந்த டீக்கடைக்கு சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பாலசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். தகவலறிந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் பாலசந்தர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பாதுகாப்பு பணியின்போது கவனக்குறைவாக இருந்ததால் பாதுகாவலர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில் கடந்த 22ம் தேதியே பிரதீப், சஞ்சய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இருவரையும் கைது செய்யாததன் விளைவாக கடந்த 24ம் தேதி பாஜ பிரமுகர் கொலை சம்பவம் நடந்துள்ளது. எனவே, இந்த கொலை வழக்கு தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை சட்டம்-ஒழுங்கு இன்ஸ்ெபக்டர் சிவசுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் செய்திகள்
ஆக-08: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24
எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட் ஏவிய 2 செயற்கைக்கோள்களும் செயலிழப்பு இஸ்ரோ அறிவிப்பு
ரிசர்வ் வங்கி அங்கீகரித்த வங்கிகள், நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் பொதுமக்களுக்கு டிஜிபி அறிவுறுத்தல்
அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதர அட்டை
கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு நாள் டெல்லியில் அனைத்து கட்சியினர் மரியாதை
வரும் 13 முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்; எல்.முருகன் வேண்டுகோள்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!