ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: லடாக்கில் சோகம்
2022-05-28@ 00:02:01

ஸ்ரீநகர்: லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஆற்றில் விழுந்ததில் 7 வீரர்கள் பலியாகினர்.ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் பணியாற்றும் ராணு வீரர்கள், அடிக்கடி முகாம்கள் மாற்றப்படுவது வழக்கம். இதன் காரணமாக, ஒரு முகாமில் இருந்து மற்றொரு முகாமுக்கு வாகனங்களில் அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.இதுபோல், லடாக்கில் உள்ள பர்தாபுர் என்ற இடத்தில் இருந்து ஹனிப் என்ற இடத்தில் உள்ள எல்லை முகாமுக்கு நேற்று காலை 26 வீரர்கள் ராணுவ வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, அவர்கள் சென்ற வாகனம் திடீரென சாலையில் இருந்து வழுக்கிச் சென்று, 60 அடி பள்ளத்தில் உள்ள சியோக் ஆற்றில் கவிழ்ந்தது. இதில், 7 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், பல வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும் நடவடிக்கையில் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்த மீட்பு பணியி்ல விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்ேவறு கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளன.
நடிகையை கொன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் நேற்றும் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் தேடி பிடித்து கொன்றன. ஜம்முவில் கடந்த புதன்கிழமை இரவு பிரபல டிவி நடிகையான அம்ப்ரின் பட்டை சுட்டுக் கொன்ற 2 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளையும், மற்றொரு இடத்தில் இதே அமைப்பை சேர்ந்த மேலும் 2 தீவிரவாதிகளையும் பாதுகாப்பு படைகள் சுட்டுக் கொன்றன. கடந்த 3 நாட்களில் மட்டுமே பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
மேலும் செய்திகள்
தேசிய பாதுகாப்பு உத்திகள் குறித்து ஆலோசனை; மாநில காவல் துறைக்கு 5ஜி தொழில்நுட்பம்: டிஜிபிக்கள் மாநாட்டில் அமித் ஷா தகவல்
நாங்கள் நெருக்கமாக இருந்தால் டேட்டிங்கா?: நடிகருடனான உறவு குறித்து நடிகை பதில்
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கேரள ராணுவ கேப்டன் சடலம் மீட்பு: மனைவியை பார்த்துவிட்டு திரும்பிய போது சோகம்
ஜனாதிபதியின் செயலராக ஒடிசா கேடர் அதிகாரி நியமனம்
அவர் ஒரு அப்பாவி; நிரபராதி; ஜாக்குலினின் இமேஜை கெடுக்கின்றனர்!: அமலாக்கத்துறை மீது பகீர் குற்றச்சாட்டு
டோலோ650 மாத்திரை தயாரிக்கும் நிறுவனம் மருத்துவர்களுக்கு இலவசப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய மருத்துவம் மற்றும் விற்பனை கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தகவல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...