ஆந்திரா, லடாக் உட்பட 6 உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்ய பரிந்துரை
2022-05-28@ 00:01:56

புதுடெல்லி: ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட ஆறு மாநில உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரை செய்து வருகிறது. இந்நிலையில், இந்த கொலிஜியம் ேநற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆந்திரா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அஹ்சானுத்தின் அமானுல்லா பாட்னா உயர் நீதிமன்றத்துக்கும், ஒடிசா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சித்த ரஞ்சன் தாஸ் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கும், திரிபுரா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சுபாசிஸ் தலபத்ரா ஒடிசா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி லனுசுங்கும் ஜமீர் கவுகாத்தி உயர் நீதிமன்றத்துக்கும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்ற நீதிபதி தீரஜ் சிங் தாக்கூர் மும்பை உயர் நீதிமன்றத்துக்கும், மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் நீதிபதி புருஷேந்திர குமார் கவுரவ் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கும் மாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று, ஒன்றிய சட்டத்துறை அமைச்சகம் விரைவில் ஆணை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
இந்தியாவில் ஒரே நாளில் 16,167 பேருக்கு கொரோனா... 41 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஷ்யாம்ஜி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி!: ஒரே நேரத்தில் பக்தர்கள் வெளியேற முயன்றதால் விபரீதம்..!!
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது: வானிலை மையம் தகவல்
விளையாட்டுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அள்ளியும், தமிழ்நாட்டுக்கு கிள்ளியும் கொடுத்த ஒன்றிய அரசு
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற நிதிஷ் திட்டமா?.. விரிசல் அதிகரித்திருப்பதால் எந்நேரமும் கூட்டணி உடைய வாய்ப்பு
விமானத்தில் இருந்து இறங்கி ஓடுபாதையில் நடந்து சென்ற பயணிகள்; பேருந்து வர தாமதம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!