செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் தொடர் பிரக்ஞானந்தாவுக்கு 2வது இடம்
2022-05-28@ 00:01:48

சென்னை: உலகின் முன்னணி வீரர்கள் 16 பேர் பங்கேற்ற ‘மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் தொடரின்’ செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் ஆன்லைன் சதுரங்கப் போட்டி பிப்ரவரி மாதம் தொடங்கி நடந்து வந்தது. இந்தியா சார்பில் களமிறங்கிய சென்னை வீரர் பிரக்ஞானந்தா (16 வயது), உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் உள்பட நட்சத்திர வீரர்களை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். பரபரப்பான இறுதிப் போட்டியில் அவர் உலகின் 2ம் நிலை வீரரான டிங் லிரெனுடன் (29 வயது, சீனா) மோதினார். முதல் செட்டை டிங் லிரென் 2.5-1.5 என்ற கணக்கில் கைப்பற்ற, 2வது செட்டில் அபாரமாக விளையாடிய பிரக்ஞானந்தா 2.5-1.5 என வென்று பதிலடி கொடுத்தார். இருவரும் சமநிலை வகித்ததால் 2 ஆட்டம் கொண்ட டை பிரேக்கர் கடைப்பிடிக்கப்பட்டது.
முதல் ஆட்டம் டிரா ஆன நிலையில், 2வது ஆட்டத்தில் லிரென் 49 நகர்த்தல்களில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு முதல் பரிசாக ₹20 லட்சமும், 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு ₹12 லட்சமும் வழங்கப்பட்டது.+1 தேர்வுக்கு இடையே சர்வதேச செஸ் போட்டியிலும் கலந்துகொண்டு சளைக்காமல் போராடி 2வது இடம் பிடித்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
மேலும் செய்திகள்
துரந்தோ கோப்பை: பெங்களூர் வெற்றி
சில்லி பாய்ன்ட்....
புதுக் கேப்டன்கள் தலைமையில் ஜிம்பாப்வே- இந்தியா மோதல்
இளம்வீரர்களுடன் எனது அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்வேன்: தவான் பேட்டி
சின்சினாட்டி ஓபன் முதல் சுற்றில் ராடுகானு, ஹாலெப்,மெட்வெடேவ் வெற்றி
முதல் ஒருநாள் போட்டி; ஹராரே மைதானத்தில் நாளை இந்தியா-ஜிம்பாப்வே மோதல்
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!