பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் ஜூனில் மின்னணு ஏலம்: தேவஸ்தானம் தகவல்
2022-05-28@ 00:01:43

திருமலை: திருப்பதியில் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் ஜூன் 16,17ம் தேதிகளில் மின்னணு ஏலம் விடப்பட உள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் பணம் மற்றும் நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதில் கிடைத்த ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா நாடுகளின் வெளிநாட்டு நாணயங்கள் ஜூன் 16, 17ம் தேதிகளில் மின்னணு ஏலம் விடப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு மார்க்கெட்டிங் துறை பொது மேலாளர் (ஏலம்) அலுவலகத்தை 0877-2264429 என்ற எண்ணிலும், gmauctionsttdd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மாநில அரசின் இணையதளம் www.konugolu.ap.gov.in அல்லது www.tirumala.org இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்’’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.8 மணி நேரம் காத்திருப்பு: திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்டம் வளாகத்தில் உள் ள 29 அறைகளும் நிரம்பி வழிவதால், 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கை நேற்று முன்தினம் நள்ளிரவு எண்ணப்பட்டது. அதில், ₹4.83 கோடி காணிக்கை கிடைத்தது.
மேலும் செய்திகள்
மின்னணு இயந்திரம் தவறான பயன்பாடு ஜனநாயகத்திற்கு கடும் சவால் 11 எதிர்க்கட்சிகள் தீர்மானம்
சுதந்திர தின விழாவில் பயங்கரவாத சதியா? இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் இளம்பெண் கைது: ஐதராபாத், நேபாளத்தில் இருந்து உதவிய வாலிபர்கள்
இந்திய விளையாட்டு துறையின் பொற்காலம் விரைவில் ஆரம்பம்: பிரதமர் மோடி நம்பிக்கை
இன்று மாலை ஜனாதிபதி முர்மு சுதந்திர தின உரை
காஷ்மீரில் தீவிரவாத தொடர்பு முஜாகிதீன் தலைவன் மகன், 3 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
ஆர்எஸ்எஸ் டிபி.யில் தேசியக் கொடி படம்: சர்ச்சைக்குப் பிறகு திடீர் மாற்றம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!