கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
2022-05-27@ 00:06:10

காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்தது. மாவட்ட தலைவர் தவமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் மோகன்ராஜ், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். அரசு அலுவலர் ஒன்றிய மாநில பொருளாளர் எஸ்.குமார், மாவட்ட பொருளாளர் அருளரசி, தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகி சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணி இடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கடந்த 2003ம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பண பயனை திரும்ப வழங்க வேண்டும். ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை கையில் ஏந்தி, கோஷமிட்டனர். பின்னர், கலெக்டர் ராகுல்நாத்தை சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தனர்.
மேலும் செய்திகள்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: நின்றபடி பைக் ஓட்டி வாலிபர் சாகசம்
கள்ளக்குறிச்சி அருகே சொர்ணகடேஸ்வரர் கோவிலில் சோழர் கால மன்னர்களில் 2 சிலை மாயம்...
தமிழ்நாடு முழுவதும் சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாட்டம்...
காவல்துறையில் 3 அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் தகைசால் பணிக்கான பதக்கம்
அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ‘டிவிட்’ செருப்பு வீசிய சின்ட்ரெல்லா வந்து பெற்றுக்கொள்ளலாம்: சமூக வலைதளத்தில் வைரல்
பஸ் கட்டணம் உயர்த்தப்படாது: போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!