கேரள சட்டசபையில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை பெண் உறுப்பினர்கள் தேசிய மாநாடு: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்
2022-05-26@ 18:00:24

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார். சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ‘ஆசாதி கா அமிர்த் திருவிழா’ வின் தொடர்ச்சியாக பெரும்பாலான மாநில சட்டசபைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் 2 நாள் தேசிய மாநாட்டை கேரள சட்டசபையில் (திருவனந்தபுரம்) நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார். இன்று காலை 11.30 மணியளவில் திருவனந்தபுரம் சட்டசபையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள சபாநாயகர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கனிமொழி எம்பி பங்கேற்பு: இந்த 2 நாள் மாநாட்டை முன்னிட்டு பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இதில் குஜராத் மாநில சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யா, திமுக எம்பி கனிமொழி, முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார், முன்னாள் எம்.பி. பிருந்தா காரத் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். இந்தியாவிலேயே முதன்முதலாக நடைபெறும் இந்த தேசிய மாநாட்டில் 17க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து சட்டமன்ற பெண் உறுப்பினர்கள், எம்பிக்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு திருவனந்தபுரம் வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை திருவனந்தபுரம் விமானப்படை விமான நிலையத்தில் கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், அவரது மனைவி ரேஷ்மா ஆரிப், அமைச்சர் ஆண்டனி ராஜு மற்றும் பலர் வரவேற்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் அவரது மனைவி சவிதா கோவிந்த் மற்றும் மகள் ஸ்வாதி ஆகியோரும் வந்துள்ளனர்.
Tags:
கேரள சட்டசபை நாடாளுமன்ற சட்டப்பேரவை பெண் உறுப்பினர்கள் தேசிய மாநாடு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்மேலும் செய்திகள்
எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அறிவிப்பு
குற்றாலம் சாரல் திருவிழா: அரிய வகை மலர், பழங்கள், காய்கறிகளுடன் கண்காட்சி
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் நிர்வாக கவுன்சில் கூட்டம்: மாநில முதல்வர்கள் பங்கேற்பு
அமெரிக்கா காதலரை மணந்த ஆந்திர பெண்: திருப்பதியில் இந்துமுறைப்படி திருமணம்
சட்டவிரோத துப்பாக்கி வழக்கு உ.பி பாஜக அமைச்சர் குற்றவாளி: கான்பூர் நீதிமன்றம் அதிரடி
மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்களிடம் உல்லாசம்: போலி தங்க வியாபாரி கைது
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!