ஈர்க்கும் சுற்றுலா
2022-05-26@ 00:13:28

சுற்றுலாத்துறை, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பெரும் பலமாக இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்றதுமே, சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். சுற்றுலாவுக்கென புதிதாக வழிகாட்டு நெறிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கலை, பண்பாடு, ஆன்மீகம், கல்வி, மருத்துவம், இயற்கை வளங்கள் என சகலமும் நிறைவாகக் கொண்ட நமது மாநிலத்தை பொறுத்தவரை வெளிமாநில, வெளிநாட்டு பயணிகளை எளிதில் ஈர்க்கக்கூடிய வலுவான சுற்றுலா கட்டமைப்பு இயற்கையிலேயே இருக்கிறது. இந்தத் துறையில், வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, பல மடங்காக தன்னை பெருக்கிக் கொண்டு மீண்டும் அரசாங்கத்தை வந்தடையும். பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாது, நம் மண்ணின் மகத்துவம், தனித்துவம், பெருமைகளை உலகின் சகல திசைகளுக்கும் கொண்டு சேர்க்கிற ஒரு நல் வாய்ப்பாகவும் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் அமைகின்றன.
கொரோனா பெருந்தொற்று கால தடைகள் முற்றிலுமாக நீங்கி, சுற்றுலாத்துறை மீண்டும் அதன் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது. கடந்த வாரம், உதகையில் துவங்கிய 124வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று துவக்கி வைத்திருக்கிறார். கொடைக்கானலில் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழாவை ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மதிவேந்தன் என நான்கு அமைச்சர்கள் துவக்கி வைத்து பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.
தமிழர் தொன்மையை உலகிற்கு பறைசாற்றும் கீழடியில் அகழ் வைப்பகம் கட்டுமானப் பணிகள் உலகத்தரத்தில் பிரமாண்டமாக முடிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இதை முதல்வர் திறந்து வைக்க உள்ளார். ரூ.11.03 கோடியில், நவீன வசதிகளுடன் 31,919 சதுர அடி பரப்பளவில் இந்த அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டிருக்கிறது. கீழடி அகழாய்வு மையங்களில் கிடைத்த, தமிழர் வரலாற்று பெருமை பேசும் தொல்பொருட்கள் இங்கு காட்சிக்படுத்தப்பட உள்ளன. வீர விளையாட்டான ஜல்லிக்கட்டையும், அதன் அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக, அலங்காநல்லூரில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நமது ஜல்லிக்கட்டின் பெருமைகளை வெளிநாட்டினரும் வந்து அறிந்து செல்லும் வகையில், ஜல்லிக்கட்டு சுற்றுலா மையம் அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் சுற்றுலா மையங்களில், சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களில் எல்லாம் கேபிள் கார் திட்டம், ஹெலிகாப்டர் சுற்றுலா என பல்வேறு திட்டங்களை புதிய வேகத்தில் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. திட்டங்கள் முழுமையடையும் போது... இந்திய சுற்றுலா வரைபடத்தில், தமிழகம் மிக முக்கிய இடம் வகிக்கும் என்பது தெளிவாகிறது.
மேலும் செய்திகள்
தமிழகம் ஒளிர்கிறது
தமிழர் பெருமை
வழக்காடு மொழி தமிழ்
கடன் என்னாகும்...?
ரஷ்ய ஆயுதம்
விளையாட்டில் வளர்ச்சி
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!