SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை அருகே நில அபகரிப்பு முயற்சி வழக்கில் சார்பதிவாளர் கைது

2022-05-25@ 15:22:25

சென்னை: சென்னை அருகே போலி ஆவணங்கள் மூலம் ₹65 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு முயற்சி வழக்கில் நேற்று சார்பதிவாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில், முட்டுக்காடு கிராமத்தில் பிரபலமான கிரானைட் நிறுவனத்துக்கு சொந்தமான 5 ஏக்கர் 88 சென்ட் நிலம் உள்ளது. இந்த சொத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் 1971ம் ஆண்டு தென்சென்னை மாவட்ட சார்பதிவகத்தில் வைத்து கிரையம் பெற்றுள்ளது. அந்நிறுவனமும் தங்களுக்கு சொந்தமான மற்ற நிலங்களோடு சேர்த்து, இந்த நிலத்துக்கும் மதில்சுவர் அமைத்து, வருவாய்த்துறை சார்பில் அந்த நிறுவனம் மற்றும் இயக்குனர்களின் பெயரில் பட்டாவும் பெற்றுள்ளனர்.

  இந்நிலையில், இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க நினைத்த கும்பல், 1971ம் ஆண்டு மதுராந்தகத்தை சேர்ந்த மதுரை என்பவர் கிரையம் பெற்றது போல் போலி ஆவணம் தயார் செய்து, மதுராந்தகத்தில் ஆட்டோவில் செல்லும்போது ஆவணம் தொலைந்து விட்டதாக கூறி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து சான்று பெற்றுள்ளனர். அதை வைத்து, திருப்போரூர் சார்பதிவகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றும் காசி (60) என்பவர் மூலமாக போலி ஆவணங்களை தயார்செய்து சார்பதிவாளர் அலுவலகம் கொடுத்தது போன்று நகல் ஆவணம் பெற்றுள்ளனர்.

இந்த ஆவணத்தை வைத்து, 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுராந்தகத்தை சேர்ந்த மதுரை என்பவர், தனது மகன் ரஞ்சித்குமாருக்கு குடும்ப தான செட்டில்மெண்ட் கொடுப்பது போல் ஆவணம் தயார் செய்து, திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுக்கு கொடுத்துள்ளனர். இந்த ஆவணத்தை அப்போதைய சார்பதிவாளர் செல்வசுந்தரி என்பவர் பதிவு செய்துள்ளார். இதற்கிடையே போலி ஆவணம் தயார் செய்த கும்பல், மதில்சுவர் போடப்பட்ட நிலத்தின் உள்ளே நுழைந்து அபகரிக்க முயற்சித்தனர். அப்போதுதான் உண்மை உரிமையாளர்களான பிரபல கிரானைட் கம்பெனி அதிபர்கள், தங்களது நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளனர். இதையடுத்து தனியார் நிறுவனத்தின் சார்பில் சென்னை தாம்பரம் பெருநகர காவல் ஆணையர் ரவியிடம் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த போலி ஆவணம் குறித்து தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்தனர்.

கடந்த ஒரு வாரமாக திருப்போரூர் சார்பதிவகத்தில் தனிப்படை விசாணையில், அலுவலக தற்காலிக ஊழியர் காசி என்பவர் உதவியோடு சார்பதிவாளர் செல்வசுந்தரி இந்த முறைகேட்டுக்கு துணைபோனது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி தாம்பரம் மாநகர தனிப்படை போலீசார் தற்காலிக ஊழியர் காசி, அவரது மருமகன் பிரபாகரன், போலி ஆவணம் எழுதிக்கொண்ட ரஞ்சித்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், போலி ஆவணத்தை பதிவு செய்த சார்பதிவாளர் செல்வசுந்தரி, ஏற்கெனவே லஞ்ச வழக்கு ஒன்றில் கைதாகி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். சென்னை புறநகரில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த செல்வசுந்தரியை நேற்று மாலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • boat_medit

  மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!

 • nasa-project-artemis

  ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா

 • sea-18

  கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!

 • america_fire

  கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

 • mexico-mine-17

  மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்