வாய்ப்பு கிடைக்கும் வரை நீ தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும்; அணித் தேர்வில் நான் தலையிடுவது இல்லை: சச்சின் பதில்
2022-05-25@ 15:14:17

மும்பை: நடப்பு ஆண்டில் ஐபிஎல்லில் அர்ஜூன் ஆட்டத்தைப் பார்க்க ஆர்வமுடன் இருந்தீர்களா? என சச்சினிடம் கேள்வி கேட்கப்பட்டது. இது வித்தியாசமான ஒரு கேள்வி. நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமல்ல. இந்த சீசனில் மும்பை அணிக்குரிய லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டது. உன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பாதை சவாலானது. மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. உனக்கு கிரிக்கெட் மீது ஈடுபாடு இருந்ததால் கிரிக்கெட் விளையாட தொடங்கினாய். அந்த ஆர்வம் இருந்தால் வாய்ப்பு கிடைக்கும் வரை நீ தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். அப்படிச் செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும் என சொல்வேன் என பதில் அளித்தார். மேலும் ஆடும் லெவனில் அவரை சேர்ப்பது அணி நிர்வாகத்தின் முடிவு. அணித் தேர்வில் நான் ஒரு போதும் தலையிடுவது கிடையாது எனவும் கூறினார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும், இடக்கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜூன் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். இரண்டாவது ஆண்டாக அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2-வது சீசன் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்குபெற்றது. ஏற்கனவே இருந்த 8 அணிகளுடன் புதிதாக 2 அணி களமிறங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணி இதில் 14 போட்டிகளில் பங்குபெற்று 4 போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. அதனால் மும்பை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
மேலும் செய்திகள்
ஜிம்பாப்வேயுடன் முதல் ஒருநாள் போட்டி10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி; தவான், கில் அசத்தல்
நியூசி.யை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போராடி தோற்றார் நடால்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ்; 2வது சுற்றில் இகா ஸ்வியாடெக்; மேடிசன் கீஸ் வெற்றி: நடால் அதிர்ச்சி தோல்வி
ஆப்கனுக்கு எதிரான 5வது டி20; அயர்லாந்து அபார வெற்றி: தொடரை 3-2 என கைப்பற்றியது
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...