மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்..
2022-05-25@ 14:42:46

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.5.2022), சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 6.5.2022 அன்று தனது சமூக வலைதளத்தில் 'வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்!' கடுமையான நெருக்கடிகளின் போது தான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும். விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும் என்று பதிவிட்டிருந்தார்.
சென்னை, கோடம்பாக்கத்தில் வசித்து வரும் மாணவி சிந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோழியுடன் விளையாடும்போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து இரண்டு கால்களிலும் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் மாணவி சிந்துவின் முகத்தின் தாடை மற்றும் பற்கள் உடைந்தது. இந்நிலையில் இம்மாணவிக்கு சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த நிலையிலும் தொடர்ந்து மாணவி சிந்து தன்னம்பிக்கையுடன் படித்து +2 பொதுத் தேர்வு எழுதுவதற்கு அவரது தந்தை தேர்வு மையத்திற்குத் தூக்கிச் சென்ற செய்தியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது கவனத்திற்குச் சென்ற பிறகு தேர்வு எழுத 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு அவர் தேர்வு எழுதி முடித்த பிறகு ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (25.5.2022) சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும் சிந்துவின் தந்தை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் தேநீர் கடை நடத்துவதற்கான அனுமதி ஆணையை வழங்கினார். இந்நிகழ்வின்போது மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
திரு. கே.ஆர். பெரியகருப்பன் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு, மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வி. கணேசன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.உடன் இருந்தனர்.
மேலும் செய்திகள்
ஆக-08: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24
எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட் ஏவிய 2 செயற்கைக்கோள்களும் செயலிழப்பு இஸ்ரோ அறிவிப்பு
ரிசர்வ் வங்கி அங்கீகரித்த வங்கிகள், நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் பொதுமக்களுக்கு டிஜிபி அறிவுறுத்தல்
அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதர அட்டை
கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு நாள் டெல்லியில் அனைத்து கட்சியினர் மரியாதை
வரும் 13 முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும்; எல்.முருகன் வேண்டுகோள்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!