காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றும் கல்குவாரி கிரசர்கள் மீது நடவடிக்கை: கலெக்டரிடம் கோரிக்கை
2022-05-25@ 00:59:23

காஞ்சிபுரம்: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், கலெக்டர் ஆர்த்தியிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தீனன் தலைமையில் தமிழக கனரக லாரி உரிமையாளர்கள் சங்கம், மெட்ராஸ் லாரி ஓனர் அசோசியேட் ஆகிய சங்கங்கள் இணைந்து விபத்தில்லா தமிழகம் உருவாக்குவோம் என்ற திட்டம் வெற்றியடைய 6 மாதமாக லாரிகளில் எந்த கனிம பொருள்களையும் அதிகளவில் ஏற்றுவதில்லை என முடிவு செய்தனர். அரசு விதிக்கு உட்பட்டு கனிம லோடுகளை ஏற்றி தொழில் செய்கின்றனர். இதையொட்டி, சுமார் 80 சதவீத டிப்பர் லாரிகளில் உயர்த்தி இருந்த ரீப்பர்களை அகற்றினர்.
அதில் 20 சதவீத லாரிகளில் ரீப்பர்களை அகற்றாமல் பகல் நேரங்களில் 10 டன், இரவு நேரங்களில் 32 டன் வரை அதிக பாரம் ஏற்றப்படுகிறது. இதனால் அதிக விபத்துகளும் உயிர் சேதமும் ஏற்படுகிறது. அதிக பாரம் ஏற்றுவதால் ஏற்படும் விபத்துகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்குவதில்லை. குறிப்பாக, சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைவது மட்டுமின்றி புகை ஏற்பட்டு, சாலை பெயர்ந்து, காற்று தூசு மாசடைவதும் மக்களுக்கு பிரச்னையாக உள்ளது. எனவே கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், கனிமவளத் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், சட்டத்துக்கு புறம்பாக அதிக பாரம் ஏற்றும் லாரிகளுக்கு லோடு வழங்காமலும், அதிக பாரம் ஏற்றும் கல்குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Tags:
Kanchipuram District Overburdened Calcutta Crushers Request to Collector காஞ்சிபுரம் மாவட்ட அதிக பாரம் கல்குவாரி கிரசர்கள் கலெக்டரிடம் கோரிக்கைமேலும் செய்திகள்
இடைக்கழிநாடு பேரூராட்சியில் மழைநீர் வடிகால்வாயில் கழிவுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரையால் அடித்து கொலை செய்த கணவன் போலீசில் சரண்
கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் ஊராட்சியில் டவர் அமைக்க எதிர்ப்பு; இடத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
6 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளுடன் விவசாய சங்க மாநில தலைவர் கலந்துரையாடல்; நீதமன்றத்தில் வழக்கு தொடர முடிவு
அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!