SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வளம் பெறும் தமிழகம்

2022-05-25@ 00:02:37

10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டில் சிக்கித்திணறிய தமிழகம் இன்று வளர்ச்சி நடைபோட்டு எழுந்து நிற்கிறது. ஓராண்டில் எத்தனை சாதனை. காரணம் ஒரே நபர் தான். அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.தொழிற்துறையை முடுக்கி விட்டு முதலீடுகளை தமிழகத்தை நோக்கி  வரவைக்கும் முயற்சி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இப்போது விவசாய புரட்சி. அதற்கான திட்டமாகத்தான் தமிழகத்தில் 9 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.227 கோடி மதிப்பில் கலைஞரின் கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 11.75 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் கூடுதல் சாகுபடி செய்யவும், இருபோக சாகுபடி நிலப்பரப்பை 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்தவும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 1997 கிராம பஞ்சாயத்து அளவில் இந்த திட்டம் கொண்டு செல்லப்படுவது இதன் சிறப்பு.

சூரியகாந்தி, நிலக்கடலை, பருத்தி உற்பத்தியில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் வருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கிராமங்களில் உள்ள ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கிணறு அமைத்து, மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்து கொடுத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், சிறுபாசன குளங்கள், ஊரணிகள், வரத்து கால்வாய்கள் தூர்வாருதல் உள்ளிட்ட ஏராளமான பணிகள் கிராம பஞ்சாயத்து அளவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இன்னொரு முன்முயற்சி மேட்டூர் அணை முதல்முறையாக மே மாதம் திறக்கப்பட்டு இருப்பது, அதுவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று திறந்து வைத்து இருக்கிறார். ஆண்டுதோறும் ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை தாண்டி உள்ளது. இந்த சமயத்தில் முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பது டெல்டா மாவட்டங்களில் உள்ள 5 லட்சம் ஏக்கர் நிலங்கள்  எளிதாக பாசன வசதி பெற வழிவகுக்கும். அதோடு விவசாய பணிகளை உரிய காலத்தில் தொடங்கவும், கடைமடை வரை தண்ணீர் சென்று சேரவும் வழிவகுக்கும்.

தொழிற்புரட்சியும், விவசாய புரட்சியும் ஒருங்கே நடக்கும் போது குடிமக்களின் வீடுகளில் வளம் பெருகும் என்பது நிச்சயம். தமிழகம் அப்படி ஒரு  வாய்ப்பை பெற்று இருக்கிறது. தொழிற்புரட்சி மூலம் பல்வேறு நிறுவனங்களின் முதலீடுகள் தமிழகம் நோக்கி திரும்பவும், அதன்மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலைபெறவும் நடவடிக்கை மேற்கொள்ளும் அதே சமயத்தில், கிராமப்புற விவசாய பணிகள் வளம் பெறவும், டெல்டா பகுதி செழிக்கவும், விவசாயிகள் வளம் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை பொறுத்தவரையில் சொல் அல்ல செயல். அதுதான் அவரது பலம், வெற்றி. அதுதான் இன்று தமிழகத்தை முதல் மாநிலமாக முன்னெடுத்து செல்கிறது.

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்