SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 59 பேர் பாதிப்பு: யாரும் உயிரிழப்பு இல்லை; 36 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

2022-05-24@ 19:40:45

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் இன்று புதிதாக 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 34 லட்சத்து 54 ஆயிரத்து 984 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 025 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 354 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 36 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் 34 லட்சத்து 16 ஆயிரத்து 605 பேர் குணம் அடைந்து உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 26 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 19 பேருக்கும், திருவள்ளுரில் 4 பேருக்கும், கோவையில் 3 பேருக்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • ragul-inde-15

    டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

  • independence-15

    75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்