சிகிச்சைக்காக தந்தை டி.ராஜேந்திரரை வெளிநாடு அழைத்து செல்கிறோம்: சிலம்பரசன் அறிக்கை.!
2022-05-24@ 17:47:53

சென்னை: எனது தந்தை டி.ராஜேந்தர் நலமுடன் உள்ளார் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்தன. இருப்பினும் அவரது குடும்பத்தின் சார்பாகவோ, அல்லது மருத்துவமனை நிர்வாகம் சார்பாகவோ இது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் சிகிச்சைக்காக தந்தை டி.ராஜேந்திரை வெளிநாடு அழைத்து செல்ல உள்ளதாக அவரது மகன் சிலம்பரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மறுத்த்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம்.
அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிராத்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி எனவும் கூறினார்.
மேலும் செய்திகள்
சுதந்திர தின விடுமுறை எதிரொலி!: டாஸ்மாக் கடைகளில் குவிந்த கூட்டம்..ஆக.14ல் மட்டும் ரூ.273 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை.. மதுரை முதலிடம்..!!
ஓ.பி.எஸ் தரப்பிடம் 80% அதிமுகவினர் இல்லை; 80 பேர் மட்டுமே உள்ளனர்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் சாடல்
ஐ.எப்.எஸ். நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 முகவர்கள் கைது: பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்...
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி: கட்ஆப்-ல் 200க்கு 200 மதிப்பெண் பெற்று ரஞ்சிதா முதலிடம்..!!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி பயணம்: ஜனாதிபதி, பிரதமரை நாளை சந்திக்கிறார்..!!
கோவளம் ஒருங்கிணைந்த வடிகால் திட்டத்துக்கு ஆணையம் அனுமதி
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!