கார் டிரைவர் கொலை வழக்கு ஆளுங்கட்சி எம்எல்சி அதிரடி கைது
2022-05-24@ 17:01:05

திருமலை: கார் டிரைவர் கொலை வழக்கு தொடர்பாக ஆளுங்கட்சி எம்எல்சி கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவை சேர்ந்தவர் ஆனந்த்பாபு. இவர் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மேல்சபை உறுப்பினராக (எம்.எல்.சி) உள்ளார். இவரிடம் சுப்பிரமணியம் என்பவர் கார் டிரைவராக இருந்தார். சில மாதங்களுக்கு முன் பணியில் இருந்து விலகி வேறு இடத்தில் டிரைவர் வேலை பார்த்து வந்தார். கடந்த 20ம்தேதி இவரது வீட்டுக்கு சென்ற எம்.எல்.சி. ஆனந்தபாபு, அவசரமாக வெளியே செல்லவேண்டும் எனக்கூறி தன்னுடன் காரில் அழைத்துச்சென்றதாக தெரிகிறது.
பின்னர் நள்ளிரவு, மீண்டும் காரில் திரும்பிய எம்எல்சி ஆனந்த்பாபு, ‘டிபன் வாங்க சுப்ரமணியத்தை டூவீலரில் அனுப்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார்’ எனக்கூறி சடலமாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கடும் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த காக்கிநாடா போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். எம்எல்சி ஆனந்த்பாபுவை கைது செய்யக்கோரி எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தது.
இந்நிலையில் முன்விரோதம் காரணமாக டிரைவர் சுப்பிரமணியத்தை அழைத்துச்சென்று அவரை ஓடும் காரில் இருந்து தள்ளி கொலை செய்ததாக போலீசார் வழக்குப்பதிந்து நேற்றிரவு எம்எல்சி ஆனந்த்பாபுவை கைது செய்தனர். பின்னர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி ராஜமுந்திரி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
வேலூர் மாநகராட்சி பகுதியில் போர்வெல்லுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் தடுப்பு சுவர் அமைப்பு: ஒப்பந்ததாரர் அதிரடி கைது
கள்ளக்காதலனுக்கு சொத்தை மாற்ற முயற்சி மருமகளை வெட்டி கொன்று தலையுடன் மாமியார் சரண்
யானை தந்தத்துடன் வாலிபர் கைது
போதைப் பொருள் கொடுத்து அடிமையாக்கி 20 பள்ளி மாணவிகள் பலாத்காரம்: கேரளாவில் 9ம் வகுப்பு மாணவன் கைது
அம்பத்தூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.12 கோடி நிலத்தை ஆக்கிரமித்து தனியார் பில்டருக்கு விற்பனை: 3 பேர் கைது; 6 பேருக்கு வலை
பேடிஎம்மின் கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கரை மாற்றி பணம் மோசடி; ஊர்க்காவல் படை வீரர் கைது
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!