ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் மோதியதில் அரிய வகை ரோ இன மான் உயிரிழப்பு-வனத்துறையினர் விசாரணை
2022-05-24@ 14:02:08

ஆம்பூர் : ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை சிக்னல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அரிய வகை ரோ இன மான் உயிரிழந்தது. ஆம்பூர் வனசரகத்திற்கு ட்பட்ட பல்வேறு காப்பு காடுகளில் அதிக அளவில் புள்ளிமான், கவரிமான், கஸ்தூரி மான் உள்ளிட்ட பல்வேறு இன மான்கள் வசித்து வருகின்றன. நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிக்னல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் ஒன்று உயிரிழந்தது.
இதை கண்ட அப்பகுதியினர் உடன் ஆம்பூர் வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடன் ஆம்பூர் வடக்கு பீட், வடபுதுப்பட்டு பிரிவின் வனவர் மற்றும் வனத்துறையினர் உடன் அங்கு வந்தனர். அப்போது இறந்த மான் அரிய வகையாக கருதப்படும் ரோ இனத்தை சேர்ந்தது என்பது தெரியவந்தது. உடன் அந்த மானின் சடலத்தை வனதுறையினர் மீட்டு கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், இதுகுறித்து துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
வாலிபர் கைது
ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
திம்மையன் பேட்டை ஊராட்சியில் கைபம்பு; இங்கே... தண்ணீர் எங்கே...? சீரமைக்க இருளர் மக்கள் வேண்டுகோள்
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் இரவு நேரங்களில் மட்டும் வரும் அரசு பேருந்து: பயணிகள் குழப்பம்
கொலை வழக்கில் அப்ரூவராக மாற முயன்றதால் கத்தியால் சரமாரி குத்தி ரவுடி கொலை
பொன்னேரி அருகே வேன் மோதி இருவர் பலி: டிரைவர் கைது
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!