மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கல்?.. உறவினர் தகவல்
2022-05-24@ 11:52:51

இஸ்லாமாபாத்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் உள்ளதாக உறவினர் தகவல் தெரிவித்துள்ளார். மும்பையில் 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்துவந்தது. இந்த வழக்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் தாவூத் இப்ராஹிம், சோட்டாசகீல் உள்ளிட்ட சிலர் தொடர்ந்து தலைமறைவாகவே இருக்கின்றனர்.
அவர்களை சிறப்பு நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருக்கிறது. இந்நிலையில் தாவூத் இப்ராஹிம் உறவினரான சகோதரி ஹசீனா மகன் அலிஷா பார்க்கரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் உள்ளதாக கூறினார். பாகிஸ்தானின் கராச்சி நகரில்தான் தாவூத் இப்ராஹிம் தலைமறைக உள்ளார். நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானுக்கு தப்பியோடிய நிலையில், அவரை நாடு கடத்தும் பணியில் ஒன்றிய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் இருந்து போப்பாண்டவர் இன்று டிஸ்சார்ஜ்
டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கு வரலாற்றில் இருண்ட நாள்: நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி கடும் கண்டனம்
அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சராக இந்திய வம்சாவளி தேர்வு
போட்டியின்றி தேர்வு உலக வங்கி தலைவராக அஜய் பங்கா
பாகிஸ்தானில் பெண் டாக்டருடன் சென்ற இந்து மருத்துவர் சுட்டுக் கொலை: ஒரே மாதத்தில் 2 மருத்துவர்கள் பலி
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!