உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 கோடியை நெருங்கியது!!
2022-05-24@ 07:53:11

வாஷிங்டன்: உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 52.80 கோடியாக உயர்ந்து உள்ளது. உலகம் முழுவதும் 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உருமாறி வரும் வகைகளால் பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 கோடியே 80 லட்சத்து 13 ஆயிரத்து 908 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்று 52 கோடியே 76 லட்சத்து 81 ஆயிரத்து 824 ஆக இருந்தது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 34 லட்சத்து 47 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 49 கோடியே 82 லட்சத்து 64 ஆயிரத்து 539 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து ஓராயிரத்து 414 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மேலும் செய்திகள்
‘மிஸ் இந்தியா யுஎஸ்ஏ’ பட்டம் வென்றார் ஆர்யா
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் தீவிரவாத அமைப்பின் 2வது உயர் தளபதி பலி
உளவு கப்பலுக்கு திடீர் தடை; இலங்கை முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு: அவசர கூட்டத்துக்கு அழைப்பு
உலக நாடுகளில் இதுவரை 58.86 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!
தேசத் துரோக வழக்கில் ரஷ்ய விஞ்ஞானி கைது; புடினுக்கு நெருக்கமானவர்
காது பெருசா இருக்கு, உயரம் மாறியிருக்கு இது, அவர் இல்லை; பொது இடங்களில் சுற்றும் போலி புடின்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!