போரூர் மின்சார மயான பூமியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி: பிருந்தாவன் நகர் மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
2022-05-23@ 18:33:58

சென்னை: வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட போரூர் மின்சார மயான பூமியில் தொடர்ந்து பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், பொதுமக்கள் வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், கோட்டம்-150, ஆற்காடு சாலையில் அமைந்துள்ள போரூர் மின்சார மயானபூமியில் பொருத்தப்பட்டுள்ள புகைப்போக்கி(சிம்னி) பழுதடைந்த காரணத்தினால் 03.05.2022 முதல் 22.05.2022 வரை 20 நாட்களுக்கு இயங்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது சீர்செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், 23.05.2022 முதல் 16.06.2022 வரை 25 நாட்களுக்கு மேற்கண்ட மயானபூமி இயங்காது.
எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு-149க்குட்பட்ட பிருந்தாவன் நகர் மயானபூமியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் செய்திகள்
காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு‘உங்கள் சொந்த இல்லம்’திட்டத்தின் கீழ் ரூ.378 கோடியில் வீடு, கட்டிடங்கள் திறப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைத்தார்
விவசாயிகள், தொழில்துறைக்கு அடுத்த ஆபத்து கூறுபோடப்படும் மின்துறை
எனது அறக்கட்டளைக்கு அனுப்பிய பணம் எவ்வளவு? பாடலாசிரியர் சிநேகன் மீது நடிகை ஜெயலட்சுமி புகார்
50 சதவீத மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணம் வாங்கினால் கல்லூரிகளை நடத்துவது சிரமம்: ஐகோர்ட்டில் தனியார் மருத்துவ கல்லூரிகள் வாதம்
தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன?: அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!