ஐபிஎல் 2022 சீசனின் Fastest Delivery Of Match விருதினை பெற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை
2022-05-23@ 17:36:10

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் Fastest Delivery Of Match விருதினை பெற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்துவீசிய நிலையில் தென் ஆப்பரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாட பிசிசிஐ வாய்ப்பு வழங்கியுள்ளது. தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் இவர் அதிகபட்சமாக இந்த தொடரில் 157 கி.மீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்தார்.
இவரை இந்திய அணியில் தேர்வு செய்ய கூறி பல முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க 20 ஓவர் தொடருக்கு எதிரான இந்திய அணியில் அவர் இடம்பிடித்தார். உம்ரான் மாலிக் டெஸ்ட் அணியில் இடம் பெற தகுதியானவர். அவரது பணிச்சுமையை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது, தவறினால் அவர் காயங்களுக்கு ஆளாக நேரிடும். ஒரு எக்ஸ்பிரஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு தேவைப்படும் ஆதரவு அவருக்கு வழங்கப்படும் என நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது அசாருதீன் அவரது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா
காமன்வெல்த் விளையாட்டு இந்தியாவுக்கு ஒரே நாளில் 4 தங்கம் உள்பட 14 பதக்கம்: ரவிக்குமார், வினேஷ் போகத், பவினா படேல், நவீன்குமார் அசத்தல்
ஐசிஎப் அணி சாம்பியன்
3000 மீ. ஸ்டீபுள்சேஸ் அவினாஷ் அமர்க்களம்
உலக யு-20 தடகளம் வெள்ளி வென்றார் செல்வா திருமாறன்
மந்தனா அதிரடி அரை சதம்; மகளிர் டி20 பைனலுக்கு முன்னேறியது இந்தியா
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!