உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!: அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை..!!
2022-05-23@ 15:20:56

கீவ்: உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது 2 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கீவ், கார்க்கிவ், சுமி உள்ளிட்ட நகரங்கள், ரஷ்ய தாக்குதலில் கான்கிரீட் குவியல்களாக காட்சியளிக்கின்றன. உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட கவச வாகனங்களை அழித்திருப்பதாக அந்நாடு கூறியுள்ளது.
குண்டுமழை பொழியும் பகுதிகளில் இருந்து மக்களை உக்ரைன் ராணுவம் அவசர அவசரமாக வெளியேற்றி வருகிறது. இதனிடையே, ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் பல்வேறு உதவிகளை செய்வதுடன், ரஷ்யா மீது எண்ணற்ற பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. தற்போது, உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் தொடங்கி 87 நாட்களை கடந்துவிட்டன.
இதுகுறித்து பேசிய அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி, கிழக்கு உக்ரைனின் டான்காஸ் பகுதியில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதாக கூறினார். கிழக்கு பகுதியில் நாள்தோறும் சுமார் 100 உக்ரைன் ராணுவ வீரர்கள் வரை நாட்டு மக்களுக்காக தங்களது உயிரை தியாகம் செய்து வருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தது சீன உளவு கப்பல்: 22ம் தேதி வரை முகாமிடும் என அறிவிப்பு
7 தைவான் அதிகாரிகளுக்கு சீனா பொருளாதார தடை
இந்தியாவின் சுதந்திர தினம்; நியூயார்க்கில் ஆடல், பாடலுடன் கொண்டாட்டம்
நில மோசடி வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ.. வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒடிங்கா நூலிழையில் தோல்வி..!!
சீனாவின் உளவுக் கப்பலான ‘யுவான் வாங்-5’ இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்தடைந்தது
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!