திருவாரூரில் கோயில் குளத்தில் குளிக்கச் சென்றபோது விபத்து: 2-ம் நாளாக ஆட்டோ ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்
2022-05-23@ 12:36:22

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் குளிக்கும்போது மாயமான ஆட்டோ ஓட்டுநரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் நேற்று மாலை 3 மணி குளிக்கச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் தண்ணீருக்குள் மூழ்கி மாயமானார். அதேபோன்று, குளத்தின் கீழ்கரையில் குளித்துக் கொண்டிருந்த ராஜஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுமி முஸ்கான் என்பவர் தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து இருவரையும் தேடும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டனர்.
சிறுமி முஸ்கானின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போதிய வெளிச்சம் இல்லாததால், நேற்று இரவு ஆட்டோ ஓட்டுநரை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் கமலாலயக் குளத்தில் சிறிய படகு மூலம் ஆட்டோ ஓட்டுநரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி செல்லூர் ராஜூ திட்டவட்டம்
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் தங்க நெற்றி பட்டயம் கண்டெடுப்பு; 120 ஆண்டிற்கு பின் கிடைத்த தங்கம்
செய்யூர் அருகே விளம்பூர் பகுதியில் முத்தாலம்மன், பொன்னியம்மன் கோயில்களில் ஆடி திருவிழா கோலாகலம்
வாலிபர் கைது
ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
திம்மையன் பேட்டை ஊராட்சியில் கைபம்பு; இங்கே... தண்ணீர் எங்கே...? சீரமைக்க இருளர் மக்கள் வேண்டுகோள்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!